பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

நாடக மேடை நினைவுகள்


இன்னொரு விஷயம் இங்கு குறிக்க விரும்புகிறேன். அக்காலந் தொடங்கி இந்த நாற்பது வருஷங்களாக எனது நாடங்களை யெல்லாம் பென்சிலைக் கொண்டே எழுதி வருகிறேன். இது நான் கைவிடக் கூடா வழக்கமாகி விட்டது. இதற்கு முக்கியமான காரணம் நான் எழுத உட்காரு முன் எழுத வேண்டிய வசனத்தை மனனம்பண்ணி, சித்தஞ்செய்து கொண்டே, பிறகு உட்கார்ந்து எழுத ஆரம்பிப்பேன். அப்படி மனனஞ்செய்தது எழுதி முடித்து விட்டால், மறுபடி எழுந்து அதற்கு மேல் எழுதவேண்டிய வாசகங்களை மனனம் செய்ய உலாவுவேன். இதனால் எழுத ஆரம்பிக்கும்பொழுது என்கை தடையின்றித் தாராளமாகப் போகும். இதற்குப் பென்சிலினால் எழுதுவதே அநுகுணமாயிருந்தது. அடிக்கடி பேனாவைக் கொண்டு மைக் கூட்டில் தோய்த்து எழுதுவது எனக்குத் தடையாயிருந்தது; அக்காலத்தில் பௌண்டன் பென் என்பது கிடையாது. பிறகு பௌண்டன்பென் சென்னையில் வாடிக்கைக்கு வந்த போதிலும், என் பழைய வழக்கமானது நன்றாய் வேர் ஊன்றிய என் மனத்தை, மாற்ற முடியாமற் போய்விட்டது. இப்பொழுதும் இந்த நாடக மேடை நினைவுகளைப் பென்சிலினாலேயே எழுதுகிறேன். இந்த ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் போர்மன் (Foreman) இப்படி பென்சிலினால் நீங்கள் எழுதுவதைப் படிப்பது கஷ்டமாயிருக்கிறது! கொஞ்சம் இங்கியினால் எழுதி விடுங்கள் என்று வற்புறுத்தியும் அவர் வேண்டுகோளுக்கிசைய அசக்தனாயிருக்கிறேன். “பழக்கம் பொல்லாது பாறை மேற் கோழி சீர்க்கும்” என்னும் பழமொழி என் மனத்திற்கு ஞாபகம் வருகிறது. என் செய்வது? நம்மில் பெரும்பாலர் வேறெதற்கும் அடிமைகளாகா விட்டாலும் இந்தப் பழக்கம் என்பதற்கு எளிதில் அடிமைகளாகி விடுகிறோம். அந்த அடிமைத் தனத்தினின்றும் நம்மை விடுத்துக் கொள்ள அசக்தர்களாகி யிருக்கிறோம்!

மேற்சொன்ன ‘சுந்தரி’ என்னும் நாடகத்திற்கு நான் ஒருமுறை கணக்கிட்டபடி ஐம்பத்திரண்டு ஒத்திகைகள் நடத்தினோம். தற்காலத்தில் ஏதாவது ஒரு நாடகத்தை எடுத்துக் கொண்டு, இரண்டு மூன்று ஒத்திகைகள் நடந்தவுடன் நாடகத்தைப் பகிரங்கமாக நடிக்கலாம் என்று நினைக்கும் எனது சிறு நண்பர்கள் இதைக் கவனிப்பார்களாக. இந்த ஐம்பத்திரண்டு ஒத்திகைகள் பெரும்பாலும் 4 மணி நேரத்திற்குக்