பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/613

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

598

நாடக மேடை நினைவுகள்


முன் எங்கள் சபையோர் கன்னியாகுமரிக்குப் போய் வந்தபொழுது, எனதுயிர் நண்பர் கொஞ்சம் ஜ்வரத்துடன் இருந்தார்; ஜ்வரமாயிருந்தும் மறுபடியும் தனக்குச் சமயம் வாய்க்குமோ என்னவோ எப்படியும் அவர்களுடன் போக வேண்டுமென்று நிர்ப்பந்தித்தார். அதன்பேரில், உன் உடம்பைப் பார்த்துக்கொள்; நான் உனக்கு உடம்பு சௌக்கியமானவுடன் எப்படியும் உன்னைக் கன்னியாகுமரிக்கு அழைத்துக்கொண்டு போய் அம்மன் தரிசனம் செய்து வைக்கிறேன் என்று வாக்குக் கொடுத்திருந்தேன்; கடைசி இரண்டு நாடகங்களும் ஆனவுடன் சென்னைக்குப் புறப்பட ஏற்பாடாயிருந்தபடியால், அந்த மறுநாளைத் தவிர, கன்னியாகுமரிக்கு நாங்கள் போக, எங்களுக்கு வேறு தினம் கிடைக்கவில்லை. ஆகவே, நாடகமாடிய சிரமத்தையும் கவனியாது, உடனே புறப்பட வேண்டியதாயிற்று. வழியெல்லாம் அம் மலைப் பிரதேசங்களின் தோற்றங்கள் அழகினையும் கவனியாது தூங்கிக்கொண்டே போனோம். எங்களை அழைத்துக்கொண்டு போன திருவனந்தபுரம் நண்பர், எங்களுக்கு வேண்டிய சௌகர்யங்களையெல்லாம் செய்திருந்தார். வழியில் ஓர் அழகிய குளத்தில் ஸ்நானம் செய்து கொண்டு, சுசீந்திரம் என்னும் திவ்ய ஸ்தலத்தைத் தரிசித்துக்கொண்டு, கன்னியாகுமரிக்குப் போய்ச் சேர, நடுப்பகலாய்விட்டது. அப்பொழுது கோயிலுக்குப் போனால், மத்யான பூஜையாகிக் கோயில் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன! நாங்கள் சாயங்காலமே திரும்பி வருவதாக எங்கள் சபை நண்பர்களுக்குத் தெரிவித்துவிட்டு வந்தோம். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்தும், அம்மன் தரிசனம் செய்யாமல் திரும்பிப் போவதா? சாயங்காலம் தரிசனம் செய்துகொண்டு, ராத்திரி போய்ச் சேர்வோம் என்று தீர்மானித்தோம். அன்று இந்திய லட்சுமியின் பாதத்திலுள்ள கன்னியாகுமரி முனையின் சமுத்திர கட்டத்தில் ஸ்நானம் செய்து போஜனம் கொண்டு, 12 மணி முதல் சாயங்காலம் ஆறு மணி வரையில் ஒரே தூக்கமாய்த் தூங்கினோம். பிறகு சாயங்காலம் கடற்கரையில் எங்கள் அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு கோயிலுக்குப் போய் அம்மன் தரிசனம் செய்துகொண்டு திருவனந்தபுரம் போய்ச் சேரப் புறப்பட்டோம். இந்த