பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/616

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

601


திற்கு முன் 750 ரூபாய்க்கு மேல் வசூலாகியது. இதைக் கேள்வியுற்ற எனதுயிர் நண்பர் என்னிடம் ஓடி வந்து சந்தோஷத்துடன், “எழுநூற்றைம்பது ரூபாய் வசூலாய் விட்டதாம்!” என்று கூறினார். அதற்கு நான், “இது ஒன்றும் எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை; இப்படி வசூலாகுமென்று முன்பே எனக்குத் தெரியும்; இதிருக்கட்டும்; இந்த சந்தோஷத்தை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, நீ நன்றாய் வள்ளியின் பாகத்தை நடித்து வந்திருப்பவர்களின் மனத்தைத் திருப்தி செய்யும் விதத்தைப் பார்!” என்று சொல்லி அவரை முதற் காட்சியில் மேடையின் மீது அனுப்பினேன். அன்று எனதுயிர் நண்பர் மிகவும் குதூகலத்துடன் நடித்தனர் என்று நான் இங்கு எழுத வேண்டியதில்லை. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், அவர் நடிக்காத இங்கு எங்கள் சபை ஆடிய நாடகங்கள் ஐந்தின் வரும்படியைச் சேர்த்தாலும், அவர் ஆடிய இக் கடைசி நாடகங்களில் ஒவ்வொன்றிலும் வந்த வரும்படிக்கு ஈடாகவில்லை! இந்நிகழ்ச்சியால் நான் அறிந்த நீதி இரண்டாம். ஒன்று, ‘கடவுளை நம்பினவர்கள் கைவிடப்பட மாட்டார்கள்’ என்பதும்; இரண்டாவது, மற்றவர்கள் நமக்குக் கெடுதி நினைத்தாலும் நாம் அதை ஒரு பொருட்டாகப் பாவியாது பிரதி செய்யாது, மறந்துவிட வேண்டுமென்பதுமாம். இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்கள் இந்நீதிகளைக் கடைப்பிடித்து நடப்பார்களாயின், அவர்களுக்குப் பலன் உண்டாகும் என்று நம்பி, இதை இங்கு விவரமாய் எழுதலானேன்.

இனி, திருவாங்கூர் மகாராஜாவின் முன்னிலையில் எங்கள் சபையோர் ஆடிய நாடகத்தைப் பற்றி எழுதுகிறேன். எங்கள் சபை இவ்வூருக்கு வந்ததும் எங்கள் சபையின் அங்கத்தினரில் ஒருவரும், இவ்விடம் எங்கள் சபைக்கு மிகவும் உதவி புரிந்தவருமாகிய, திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவான்ஜி (மந்திரி) யாகவிருந்த திவான் பஹதூர் ராகவையாவின் மூலமாக, மஹாராஜா அவர்களுக்கு எங்கள் சபை அவரது முன்னிலையில் ஒரு நாடகம் ஆட விரும்புவதைத் தெரிவித்தோம். அதன் பேரில், அவர்கள் எங்கள் சபையைப் பற்றி எல்லாம் விசாரித்து, தமது அரண்மனையில் ஒரு நாடகம் ஆட வேண்டுமென்று