பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/618

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

603


கொஞ்சமேனும் புராம்டிங் இல்லாமலே நடந்தது! தற்காலம் சில நாடகங்கள் நடக்கும்பொழுது நான்கு பக்கம் நான்கு புராம்டர்களும், அவர்கள் மத்தியில் பாட்டுகளை ப்ராம்ட் பண்ணுவதற்குச் சிலரும், ஏற்பாடு செய்யும் ஆக்டர்களும் கண்டக்டர்களும் இதைக் கவனிப்பார்களாக.

8 மணிக்கு நாடகம் ஆரம்பிக்க வேண்டுமென்று சொல்லியனுப்பிய மஹாராஜா அவர்கள், 71/2 மணிக்கெல்லாம் போஜனம் முடித்தாயது; உடனே ஆரம்பிக்க முடியுமா? என்று கேட்டனுப்பினார்! நாங்கள் எல்லோரும் முன்பே ஆயத்தமாயிருந்தபடியால், ‘இன்னும் ஐந்து நிமிஷத்தில் ஆரம்பிக்கிறோம்’ என்று சொல்லியனுப்பி, பிள்ளையார் துதி, சரஸ்வதி துதியை உடனே பாடி, நாடகத்தை ஆரம்பித்தோம். இது மகாராஜா அவர்களுக்கு மிகவும் திருப்தியைக் கொடுத்ததென்று பிறகு கேள்விப்பட்டேன். முதல் காட்சியில் எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு, இந்திரன் சபையில் நர்த்தனம் செய்தது மிகவும் புகழப்பட்டதெனவும் அறிந்தேன். நர்த்தனம் செய்யும் பொழுது, சம்ஸ்கிருதத்தில் மஹாராஜாவின் மீது கட்டப்பட்ட ஒரு சுலோகத்தைப் பாடி நர்த்தனம் செய்தார். நாடக ஆரம்பத்தின் முன் எமது ஆக்டர்களெல்லாம், ஒரே ஒருவர் முன்னிலையில் நாடகமாடுவதென்றால், அது எப்படி இருக்கும் என்று கூச்சப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆயினும், இந்தச் சந்தேகம் டிராப் படுதா மேலே போனவுடன், நிவர்த்தியாகிவிட்டது. மஹாராஜா அவர்கள் ஒரு பக்கமாக உட்கார்ந்திருக்க, மற்றொரு புறம் அவரது இரண்டு மனைவியரும் பிள்ளைகள் முதலியோரும் உட்கார்ந்திருக்க, இரண்டு பக்கங்களிலும் பின்புறத்திலும், அரண்மனையிலிருந்த ஏறக்குறைய அனைவரும் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்! நாடகமானது ஒரு தடையுமின்றி, காட்சிக்குக் காட்சி இடைக்காலம் ஏதுமின்றிப் பரபரவென்று நடந்தேறியது. ஆக்டர்களனைவரும் மிகவும் நன்றாக நடித்தார்களென்றே சொல்ல வேண்டும். சாதாரணமாக நான்கு மணி நேரம் பிடிக்கும் இந்நாடகம் 21/2 மணி நேரத்திற்குள் முடிந்துவிட்டது! நாடகம் முடிந்ததும் நாங்கள் வழக்கப்படி சபை மங்களம் பாடி முடிந்தவுடன், மஹாராஜா அவர்கள் தன் ஆசனத்தை