பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/620

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

605


இவ் வருஷம் எனது நண்பர் ச. ராகவாச்சாரியார் சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்த “வேணீ சம்ஹாரம்” எனும் நாடகம் முதன்முறை ஆடப்பட்டது. இதில் எனதுயிர் நண்பர் ரங்கவடிவேலு பானுமதியாக நடிக்க, நான் துரியோதனனாய் நடிக்க வேண்டி வந்தது. நான் இதுவரையில் ஆடிய அநேக நாடகப் பாத்திரங்களில், மனத்தில் திருப்தியில்லாமல் நடித்த வெகு சிலவாகிய வேடங்களில் இது ஒன்றாகும். ரங்கவடிவேலு பானுமதி வேடம் பூண்டமையால், நான் இவ் வேடத்தைத் தரித்தேனே யொழிய இல்லாவிடில் ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன். சிறு வயதில் மஹாபாரதத்தை நான் தமிழில் படித்தது முதல், இந்தத் துரியோதனனை, நான் மிகவும் வெறுத்து வந்தேன். அப்படியிருக்க அவ்வேடத்தை நான் எவ்வாறு நன்றாய் ஆட முடியும்?

இவ் வருஷம் சில அங்கத்தினரின் பிரேரேபணையின்படிச் சபையில் சங்கீதக் கச்சேரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று யோசித்து, ஸ்ரீமான் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் அவர்கள் கச்சேரி ஒன்று ஏற்பாடு செய்தோம். இப் பிரயத்தனமானது பிறகு சரிவராது கைவிடப்பட்டது.

எங்கள் சபையின் சரித்திரத்தில் இவ்வருஷம் நடந்த நிகழ்ச்சிகளுள் முக்கியமானது, சென்னைக் கவர்ன்மெண்டார் மூலமாக எங்கள் சபைக்கு நேபியர் பார்க் என்னும் இடத்தில் 22 மனை 2,199 சதுர அடியுள்ள நிலம் எங்கள் நாடகசாலையும் இருப்பிடமும் கட்டக் கிடைத்ததேயாம். இவ்வருஷ முடிவில் கட்டட பண்டாக எங்களிடம் 66,683-14-7 இருந்தது.

1922ஆம் வருஷம் இன்னொரு புதுப் பிரயத்தனம் செய்து பார்த்தோம். “அசந்துஷ்டேத் விஜோ நஷ்ட: சந்துஷ்டஸ் சைவ பார்த்திவ:” என்று ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் உண்டு; அதன் பொருள் “கிடைத்தது போதாது என்றிருக்கும் பிராமணனும், கிடைத்தது போதும் என்றிருக்கும் அரசனும், நஷ்டமடைவார்கள்” என்பதாம். ஆகவே, எனது பால்ய நண்பர் எப்பொழுதும் எனக்கு ஞாபகமூட்டுகிறபடி, எங்கள் சபையில் ஏதாவது புதிய பிரயத்தனம் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பது,