பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/622

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



25ஆவது அத்தியாயம்

னி 1923ஆம் ஆண்டில் நடந்த விஷயங்களைப் பற்றி எழுதுகிறேன். நான் எந்த வருஷத்தை மறந்தாலும் இந்த வருஷத்தை மறக்க முடியாது. இவ்வருஷம் இருபத்தெட்டு வருடங்களாக என்னுடன் நாடக மேடையில் நடித்த எனதுயிர் நண்பர், என் பூர்வ பாபவசத்தால் என்னை விட்டு விண்ணுலகம் சென்றனர். இதைப்பற்றி நான் எழுதும்பொழுது ஆங்கிலத்தில் ஒரு கவி எழுதிய இரண்டடிகள் ஞாபகம் வருகின்றன. அவைகளின் தமிழ் அமைப்பு “நகைத்தையேல் உலகம் நகைத்திடும் உன்னுடன்; அழுதையேல், நீ தான் அழவேண்டும் தனியே!” என்பதாம். இவ்வுண்மையைக் கருதினவனாய், நினைக்குந்தோறும் அதி துக்கத்தை விளைக்கும் இவ் விஷயத்தைப்பற்றி மேல் ஒன்றும் எழுதாது விடுத்தேன்.

எனதுயிர் நண்பர் மடிந்ததைக் கேட்டு எங்கள் சபையில் மனமுருகாத அங்கத்தினர் ஒருவருமில்லை. அவரை மேடைமீது ஒருமுறை பார்த்தவர்களுள் கூட ஒருவராவது அவர் இறந்ததைப் பற்றி விசனப்படாதவர் இல்லையென்றே கூற வேண்டும். அவர் மடிந்த பிறகு மறுபடி சபைக்குப் போவதா என்றிருந்தேன். ஆயினும் போக வேண்டியதாயிற்று; புருஷனைப் பறிகொடுத்த கைம்பெண், தன் தாயார் வீட்டிற்குப் போகும் மனத்துடன் போய்ச் சேர்ந்தேன்! இனி நாடக மேடை ஏறுவதில்லை என்று உறுதியாய்த் தீர்மானித்தேன். அத் தீர்மானத்தினின்றும் மாற வேண்டி வந்த கதையைப் பிறகு எழுதுகிறேன்.

அவரது பிரேதத்தைச் சம்ஸ்காரம் செய்த தினம் எங்கள் சபை மூடப்பட்டது. சில தினங்களுக்குள் ஒரு பொதுக் கூட்டம் கூட்டப்பட்டுச் சபையோர்கள் அவர் இறந்ததனால் சபைக்கு நேரிட்ட துக்கத்தைத் தெரிவித்தனர். அன்று அவர் 28 வருஷ காலமாக சபையில் முக்கிய வேஷம் தரித்து நடித்ததைப் பற்றியும், சபையில் பொக்கிஷதாரராகவும் ஸ்டேஜ் டைரக்டராகவும், காரியதரிசியாகவும், கண்டக்டராகவும்; கடைசியில் வைஸ்பிரசிடெண்டுகளில் ஒருவராக வும் இருந்ததைப் பற்றியும் எனது பால்ய நண்பர் வி.வி.