பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

நாடக மேடை நினைவுகள்


இன்னின்ன குற்றங்கள் இருந்தன வென்று சொல்லுவார். எடுத்துக்காட்டப்பட்ட குற்றங்கள் குறைவாக இருந்தால், மறு ஒத்திகையில் பார்த்துக்கொள்வோம்; அதிகமாக இருந்தால், அக்காட்சியை முழுவதும், ‘அடியைப் பிடியடா பாரதபட்டா’ என்று முதல் முதல் மறுபடியும் நடத்திக் காட்டுவோம் அவருக்கு.

இப்படி நாங்கள் வெயிலின் கொடுமையும் பாராமல் ஐந்தாறு மணிநேரம் ஒத்திகை நடத்தும்பொழுது, நாங்கள் அருந்த என்ன சிற்றுண்டிகள் எங்களுக்குக் கொடுக்கப்பட்டன வென்பதை எனது நண்பர்கள் அறிய விரும்புவார்களன்றோ ? இதைப்பற்றி சபையின் சட்டங்களில் எழுதப்படாத சட்டம் ஒன்றுண்டு. அதாவது, ஒத்திகை செய்யும் ஒவ்வொரு நாடக பாத்திரமும் தனக்கு வேண்டிய மட்டும் ஒருவிதமான ஆட்சேபனையுமின்றி, எத்தனை லோடா குழாய் ஜலம் வேண்டுமென்றாலும் தாராளமாய்ச் சாப்பிடலாம் என்பதே! தற்காலம் அரைமணி நேரம் ஒரு மணி நேரம் ஒத்திகை செய்துவிட்டு, ஒரு காரம், ஒரு தித்திப்பு, கொஞ்சம் வாதுமைக் கொட்டை, ஒரு டம்ளர் காப்பி வேண்டுமென்று கேட்கும் எனது சிறிய நண்பர்கள் இதைச் சற்றுக் கவனிப்பார்களாக.

மேற்சொன்ன புஷ்பவல்லி, சுந்தரி என்னும் இரண்டு நாடகங்களுக்கும் ஒத்திகை நடத்தி, 1893 ஆம் வருடம் மார்ச்சு மாதம் விக்டோரியா பப்ளிக்ஹாலில் மேற்படி நாடகங்களை நடித்த வரையில், எங்கள் சபைக்கு மாதாந்த வரும்படி சுமார் ரூபாய் 51/2 யே! அதில் பிடில் வாசிக்கும் மனிதனுக்கு மாதச் சம்பளம் ரூபாய் 5, நாற்காலி மேஜை முதலியவற்றை தூசியில்லாமல் தட்டி விளக்கேற்றிவைத்த வேலைக்காரனுக்கு ரூபாய் 1/2 சரியாகப் போச்சுது; ஒத்திகை நடக்கும் பொழுது இருட்டிய பின் ஏற்றிய கிரோசின் (kerosine) எண்ணெய் விளக்குக்கு எண்ணெய் சில நாட்களில், காரியதரிசியாகிய முத்துக்குமார சாமி செட்டியார் வீட்டிலிருந்தும், சில நாட்களில் என் வீட்டிலிருந்தும் அனுப்பப்படும். இவ்வாறு மிகுந்த கஷ்டப்பட்டு அந்த ஒன்றரை வருடத்துக்குமேல் நாங்கள் ஒத்திகைகள் நடத்தியபோதிலும், அப்பொழுது என் மனத்தில் இருந்த சந்தோஷம் பிறகு எங்கள் சபை மாதத்திற்கு ஆயிரக்கணக்கான ரூபாய் வரும்படியுடைய தாயிருந்தும், நாடகப் பாத்திரங்களுக்கு வேண்டியனவெல்லாம் வழங்கும் ஸ்திதியிலிருந்தும்,