பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/631

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

616

நாடக மேடை நினைவுகள்


வுடன், இராமலிங்க ஸ்வாமி பாடலில் “கல்லார்க்கும் கற்றவர்க்கும்” என்னும் திவ்யமான பாடலைப் பாடி மங்களம் பாடுவது வழக்கம்; இந்தப் பாட்டை யாராவது தெருவில் பாடும் பிச்சைக்காரன் பாடிக் கொண்டு போனாலும், உடனே எழுந்திருந்து கைகூப்பி வணங்குகிற வழக்கம் எனக்குச் சுபாவமாய்விட்டது.

மேற்சொன்ன உபசார விருந்தின் முடிவில் நான் என்னைக் கௌரவப்படுத்திய சபையோருக்கு வந்தனமளிக்க வேண்டிய சமயம் வந்தபொழுது, “நீங்கள் எனக்குச் செய்த உபசாரத்தால் என் மனம் சந்தோஷமடைந்திருக்கிறது. ஆயினும், என் மனம் பூரணமாகத் திருப்தி அடையவில்லை; என் மனத்தில் ஒரு குறையிருக்கிறது; அக்குறை தீர்ந்தால்தான் எனக்குப் பூரண உவகையுண்டாகும். அது என்னவெனில், எனக்கு ஸ்மால்காஸ் கோர்ட் ஜட்ஜ் வேலையானதுபோல், எனது பால்ய நண்பராகிய வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு ஹைகோர்ட்டு ஜட்ஜ் வேலையாகி, அவருக்கு நாம் எல்லோரும் இதுபோன்ற விருந்து செய்ய வேண்டுமென்பதே” என்று கூறினேன் என் வேண்டுகோளுக்கிணங்கி, ஈசன் அருளியது போல் இரண்டு மூன்று மாதங்களுக்குள் அவருக்கு அப்படியே ஹைகோர்ட் ஜட்ஜ் வேலையாச்சுது! நான் கோரியபடியே, அவருக்கு எங்கள் சபையார் இவ்வருஷம் ஜூலை மாதம் 26ஆம் தேதி உபசார விருந்தளித்தனர்.

எங்களிருவருடைய நட்பைப்பற்றி, இதை வாசிக்கும் நண்பர்களுடைய அனுமதியின் மீது, ஒரு விந்தையான சமாச்சாரத்தை இங்கெழுத விரும்புகிறேன். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் 1882ஆம் வருஷம், முதல் முறை பச்சையப்பன் கலாசாலையின் கீழ்ப்பிரிவாகிய கோவிந்தப்ப நாயக்கர் பள்ளியில் சந்தித்தோம். அது முதல் மிகுந்த அன்யோன்ய ஸ்நேகிதர்களாகி, தெய்வ கடாட்சத்தால் ஐம்பது வருஷத்துக்கு மேல் கழித்தோம். இதைக் கொண்டாட வேண்டி, எங்கள் சபை ஆக்டர்களுக்குள் முக்கியமானவர்களையெல்லாம் வரவழைத்து, எனது பால்ய நண்பர் இதை நான் எழுதிய வருஷமாகிய 1932ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான் பிறந்த தேதியில் எனக்கு ஒரு சிறந்த விருந்தளித்தார். நாங்களிருவரும் மேற்சொன்னபடி