பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/638

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

623


எனது பால்ய நண்பராகிய வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் அக்கிராசனம் வகித்தார்.


26ஆவது அத்தியாயம்

னி 1925ஆம் வருஷத்திய நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறேன்.

இவ்வருஷம் எங்கள் சபையின் வைஸ் பிரஸிடெண்டுகளில் ஒருவராயிருந்த சி.பி. ராமஸ்வாமி ஐயருக்கு நைட் பட்டம் வந்ததற்காக, ஒரு விருந்து கொடுத்தோம். பிப்ரவரி மாதம் 20ஆம் தேதியிலும், ஏப்ரல் மாதம் 26ஆம் தேதியிலும், சபையின் அங்கத்தினரைக் கொண்டே இரண்டு சங்கீதக் கச்சேரிகள் ஏற்பாடு செய்து பார்த்தோம். அவை அத்தனை நன்றாக இல்லை என்பது என் எண்ணம். சபையோர்களுக்கு இது அவ்வளறாக ருசிக்காதபடியால் இவ் வழக்கத்தை விட்டோம்.

“தமிழ் நாடகமும் திருக்குறளும்'"என்ற விஷயத்தைப் பற்றி தமிழ் வித்துவான் எஸ். குப்புசாமி முதலியாரைக் கொண்டு ஒரு உபன்யாசம் செய்வித்தோம். இத்தகைய உபன்யாசங்கள் அங்கத்தினர் மனத்தை அவ்வளவாகக் கவரவில்லை என்பது என் தீர்மானம்.

இவ் வருஷம் சபாபதி மூன்றாம் பாகம் அல்லது “ஒரு ஒத்திகை” என்னும் சிறு நாடகத்தை, கோர்ட்டு விடுமுறைக் காலத்தில் எழுதி முடித்தேன். இச் சிறு நாடகத்தில், எனது நண்பர்களுக்கு நகைப்பை உண்டாக்கத்தக்க ஒரு விஷயமுண்டு; அதாவது இதன் நாடகப் பாத்திரங்களுக்குள், என்னையே ஒரு நாடகப் பாத்திரமாகச் சேர்த்து எழுதியுள்ளேன். இந்நூலை வாசித்திருக்கும் எனது நண்பர்கள், அந்நாடகப் பாத்திரங்களின் குறிப்பில் “சம்பந்த முதலியார்! ஒரு நாடகாசிரியர்” என்பதைப் பார்த்து நகைத்திருக்கலாம்! இது இவ்வருஷத்திய தசராவின் முதல் நாளில் நடிக்கப்பட்ட பொழுது, நான் சாதாரணமாக அணியும் தலைக் குட்டை,