பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/640

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

625


வருடங்களுக்குள் அதைப் பெயர்த்து எடுத்துப் பார்க்கும் அபாக்கியம், எனக்கே கிட்டுமென நான் கனவிலும் நினைத்தவனன்று! இது நடந்த மூன்று வருடங்களுக்கெல்லாம், நேப்பியர் பார்க் நிலம் கட்டிடத்திற்குத் தக்கதன்று என்று நாங்கள் கண்டறிந்து, கவர்ன்மெண்டாருக்கு அதை மறுபடியும் திருப்பிக் கொடுக்க நேரிட்ட பொழுது, இரண்டொரு கொல்லர்களுடன் போய் அக் கல்லைப் பெயர்த்து எடுத்து, அதனுள் வைத்த பொருள்களையும், காகிதங்கள் முதலியவற்றையும், வாடிய மனத்துடன் எங்கள் சபைக்குக் கொண்டு வந்து சேர்த்தேன்! அப்பொழுது ஸ்காட்லண்டு தேசத்துக் கவியொருவர் எழுதிய இரண்டடிகள் என் நினைவிற்கு வந்தன. அதை இங்குத் தமிழில் ஒருவாறு மொழி பெயர்த்து எழுதுகிறேன். “மனிதர்களும் மற்றும் அற்பப் பிராணிகளும் மண்மீது செய்யும் பிரயத்தனங்கள் எத்தனை முறை மாறி அழிகின்றன!” என்பதேயாம்.


27ஆவது அத்தியாயம்

தற்கு மறு வருடமாகிய 1926ஆம் ஆண்டில் எனது “புத்தாவதாரம்” எனும் நாடகமானது எங்கள் சபையில் நடிக்கப்பட்டது. இது நான் எழுதியவற்றுள்ளும் நடித்தவற்றுள்ளும் ஒரு முக்கியமான நாடகம் என்று நான் மதிக்கிறபடியால், இதைப்பற்றிச் சற்று விரிவாக எழுத வேண்டியவனாயிருக்கிறேன். 1908ஆம் ஆண்டில் நான் இலங்கைக்குப் போனது முதல், புத்தருடைய ஜீவித சரிதை என் மனத்தைக் கவர்ந்தது. அம்முறை அவர் பிறந்த தினமாகிய விசாக பௌர்ணமி அன்று, அவர் பிறந்த தினக் கொண்டாட்டத்தைக் கொழும்பிலுள்ள பௌத்த மதத்தினரெல்லாம் நடத்தியது என் மனத்தை மிகவும் கவர்ந்தது. அதன் பிறகு அம் மஹானுடைய சரித்திரத்தை நாடகமாக எழுத வேண்டுமென்று தீர்மானித்து, அவரது சரித்திர சம்பந்தமாக, எனக்குக் கிடைக்கக்கூடிய புஸ்தகங்களை