பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/641

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

626

நாடக மேடை நினைவுகள்


யெல்லாம் படித்து வந்தேன். அதன் பிறகு மூன்று முறை இலங்கைக்கு எங்கள் சபை போனபோதெல்லாம், புத்தமதஸ்தர்களுடன் பேசி அநேக விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். அங்குள்ள புத்தாலயங்களை யெல்லாம் தரிசித்து வந்தேன். பிறகே அக் கதையை நாடக ரூபமாக எழுத ஆரம்பித்தேன். அங்ஙனம் நாடக ரூபமாக எழுதியதில் எனக்கு நேரிட்ட கஷ்டமென்னவென்றால், அவரது சரித்திரத்தில் எந்தப் பாகங்களைச் சுருக்கி, நான்கு மணி நேரத்திற்குள் ஆடத்தக்க நாடகமாய் எழுதுவது என்பதேயாம். அதன்மீது அவரது சரித்திரத்தில் முக்கியமான அம்சங்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு அவைகளை நாடகம் பார்க்கும் ஜனங்களை ரமிக்கத்தக்க வழியில் காட்சிகளாகப் பிரித்து என் சிற்றறிவிற்குத் தோன்றியபடி ஒருவாறு 1918ஆம் வருஷத்தில் எழுதி முடித்தேன். நான் எழுதிய நாடகங்களுக்குளெல்லாம் அமலாதித்யனுக்குப் பிறகு, இந்த புத்த அவதாரம் எனும் நாடகம்தான் எனக்கு மிகவும் சிரமம் கொடுத்தது. ஆயினும் அந்தச் சிரமத்தின் பலனைப் பெற்றேன் என்றே நான் கூறவேண்டும். இதனால் நான் அடைந்த முக்கியமான பலன் என்னவென்றால், அப்புஸ்தகத்தின் முகவுரையில், ஆங்கிலத்தில் நான் எழுதியபடி, இப்பெரியாரது சரித்திரத்தில் பல விஷயங்களை ஆராய்ந்தறிந்ததனால், அவை என் குணத்தையே மாற்றின என்று நான் கூறவேண்டும்; அதற்கு முன் என்னிடம் பரவியிருந்த கோபம், சுய நன்மையை நாடுந்தன்மை, பொறாமை, பேராசை முதலிய பல துர்க்குணங்களைப் பெரிதும் போக்க வழி கற்றேன். மேற்சொன்ன துர்க்குணங்கள் முதலாயின முற்றிலும் என்னை விட்டகன்றன என்று இங்கெழுத எனக்கு வல்லமையில்லை; ஆயினும் அவைகளெல்லாம் பெரும்பாலும் நீங்கின என்று உறுதியாய்க் கூறுவேன். இதைப்பற்றி இதை வாசிக்கும் எனது நண்பர்கள் யாருக்காவது சந்தேகமிருக்குமாயின் அவர்களை இது செய்யும்படி வேண்டுவேன். அதாவது “ஆசியாக் கண்டத்தின் ஜோதி” என்று ஸர் எட்வின் ஆர்னால்ட் என்பவர், அவரைப்பற்றிக் கூறிய சரித்திரத்தை முற்றிலும் படித்துவிட்டுப் பிறகு, அதனால் அவர்களுடைய மனமானது முன்பில்லாத தூய்மையையும் சாந்தியையும்