பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/642

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

627


கொஞ்சமாவது பெற்றதா இல்லையா என்று எனக்குச் சொல்லட்டும் என்பதேயாம்.

மேற்கண்ட வாக்கியத்தை எழுதுங்கால் புத்தரைப்பற்றி ஒரு நினைவு எனக்கு ஞாபகம் வருகிறது. ஸர் எட்வின் ஆர்னால்ட் என்பவர், மேற்சொன்னபடி அவர் சரித்திரத்தை, “ஆசியாக் கண்டத்து ஜோதி” என்று பெயரிட்டு அச்சிட்டபொழுது, சில இதர மதஸ்தர்கள், “ஆசியாக் கண்டத்தில், அவரைவிடப் பெரிய மஹான்கள் உதிக்கவில்லையா? இவரை மாத்திரம் ஆசியாக்கண்டது ஜோதி என்று புகழ்ந்து கூறியது சரியல்ல” என்று கடிந்துகொண்டார்களாம். இவ்விஷயத்தைப் பற்றி என் அபிப்பிராயத்தை வெளியிடும் வண்ணம் இப் புத்தாவதார நாடகத்திற்கு, ஆங்கிலத்தில் “லார்ட் புத்தா, ஆர் லைட் ஆப் தி யூனிவர்ஸ்” என்று பெயரிட்டேன். இம் மஹானுடைய பெருமையை, சில வாக்கியங்களில் எழுத விரும்புகிறேன். இவரது கோட்பாடுகளை, உலகில் ஐந்தில் ஒரு பங்கு ஜனங்கள் இப்பொழுதும் பின்பற்றி வருகின்றனர்; இவரது ஜனன பூமியாகிய இந்தியாவில் இவரது மதம் நிலைக்காவிட்டாலும் இத் தேசத்தின் முக்கிய மதமாகிய ஹிந்து மதத்தையே மிகவும் மாறச் செய்திருக்கிறது. “அஹிம்சையே பரம தர்மம்” என்பதைக் கடைப்பிடிக்கச் செய்து இவர் காலத்துக்கு முன் சாதாரணமாக மாம்சபட்சணம் செய்துகொண்டிருந்த பிராம்மணர்களையும் அதை விடும்படி செய்தது. இவரது அவதாரத்தை, மஹாவிஷ்ணுவின் அவதாரங்களிலொன்றாகச் சேர்த்துக் கொள்ளும்படி செய்தது. தற்காலம் மஹாத்மா காந்தி அவர்கள் மேற்பூண்டு ஒழுகும் அஹிம்சா தர்மமானது, புத்தரிடமிருந்து வந்ததேயாம் என்பதற்கு கொஞ்சமேனும் சந்தேகமில்லை. இதனுண்மையை அறிய வேண்டின் புத்தரது நூற்றுக்கணக்கான ஜாதகக் கதைகளைப் படித்தால் ஸ்பஷ்டமாகும். “நீ அச்சிட்டிருக்கும் புஸ்தகங்களுள், எதை வாங்கச் சொல்லுகிறாய்?” என்று என்னை யாராவது கேட்பார்களாயின், “இந்தப் புத்தாவதாரத்தை வாங்குங்கள்” என்பேன்.

இப் புத்தகத்தை நான் எழுதியபொழுது காட்சி காட்சியாக அப்போதைக்கப்போது வாசித்து வந்த எனதாருயிர் நண்பராகிய சி. ரங்கவடிவேலு யாது காரணம்