பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/645

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

630

நாடக மேடை நினைவுகள்


கன்னிமாரா புஸ்தகசாலையிலிருக்கும் அஜெந்தா படங்களைப் பார்த்து பல விஷயங்களை அறிந்தேன். அன்றியும் எங்கள் சபைக்கு அச்சமயம் படுதாக்களை எழுதி வந்த சித்திரம் வரைவோனை அழைத்துக் கொண்டுபோய், ஒவ்வொன்றாய்க் காட்டி, எனக்கு வேண்டிய திரைகள் முதலியவற்றிற்கெல்லாம், ஸ்கெட்ச் (sketch) எடுத்துக் கொள்ளச் செய்தேன். பிறகே அவனைக் கொண்டு இந் நாடகத்திற்கு வேண்டிய திரைகள் முதலியன வெல்லாம் எழுதி வைத்தேன். அக்காலத்திற்கு ஏற்றபடி ஆசனங்கள், ஆபரணங்கள், ஆலவட்டம் முதலிய சின்னங்கள், உடைகள் முதலியனவெல்லாம் புதியதாய்ச் சித்தம் செய்ய வேண்டியதாயிற்று இதற்கெல்லாம் சில மாதங்கள் பிடித்ததுமன்றி, பணமும் அதிகமாய்ப் பிடித்தது. இதற்கெல்லாம் நிர்வாக சபையார் யாதொரு ஆட்சேபணையுமின்றிப் பொருள் கொடுத்தது என் பாக்கியமே.

சாதாரணமாகத் தமிழ் நாடகமேடையிலும் ஆநெக்ரோனிசம்; (anachronism), அதாவது நாடக நிகழ்ச்சி காலத்திற்குப் பொருத்தமின்மை அதிகம் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. நானே இதைப்பற்றி இதற்கு முன்பாக எழுதியிருக்கிறேன். பாரதக் கதை நடிக்கும் பொழுது துரியோதனன் உட்கார, 1896ஆம் வருஷத்திய பென்ட்வுட் நாற்காலிகளை உபயோகிப்பது போன்ற ஆபாசங்களைக் கண்டித்து; எங்கள் சபையிலும் இதற்கு முன்பாகப் பல நாடகங்களில் இம் மாதிரியான ஆபாசங்கள் இல்லாமற் போகவில்லை; இனிமேலாவது இப்படிப்பட்ட ரசாபாசங்கள் கூடாதென்று தீர்மானித்து, இந் நாடகத்திற்காக மிகுந்த முயற்சி எடுத்துக்கொண்டோம். சுத்தோதனராஜன் சிம்மாசனத்தில் உட்கார்ந்தபொழுது, தன் பாதங்களை வைத்துக் கொள்ள எப்படிப்பட்ட சார்மணைகள் அக்காலத்தில் உப யோகப்பட்டன என்பதைக்கூட ஆராய்ந்து, அப்படிப் பட்டதைச் செய்து வைத்தோம். சற்றேறக்குறைய மேற் சொன்ன ஆநெக்ரோனிசம் இல்லாமல் நடத்திய நாடகம் எங்கள் சபையில் இதுதான் முதலானது என்று கூறக்கூடும்.

இந் நாடகம் நடத்துவதில் இன்னொரு கஷ்டம் எங்களுக்கு ஏற்பட்டது. கௌதமருடைய சிஷ்யர்களாகப் பலர் வரவேண்டியிருந்தது; அவர்களையெல்லாம் தலை