பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/646

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

631


மொட்டையடித்துக்கொள்ளச் சொல்ல முடியுமா? ஆகவே, தீர்க்காலோசனை செய்து, தலையில், ரோமம் அதிகமாக இல்லாதவர்களாகப் பார்த்து அவர்களுக்கெல்லாம், தலை மொட்டையாயிருந்தால் எப்படியிருக்குமோ அப்படித் தோன்றும்படியான தொப்பிகள் மாதிரி செய்து போட்டு பத்துப் பன்னிரண்டு சிஷ்யர்களைத் தயார் செய்ய வேண்டி வந்தது.

இந் நாடகத்தில் வேண்டிய பாட்டுகளுக்காக, கதை வடக்குப் பிரதேசத்தில் நடப்பதால், தக்க இந்துஸ்தானி வர்ண மெட்டுகளாகப் பிடித்து அம் மெட்டுகளில், காலஞ் சென்ற எனது நண்பராகிய ம. முருகேச முதலியாரைக் கொண்டு சாஹித்யங்கள் செய்து கொடுத்தேன். அன்றியும் இப் பாட்டுகளெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி இருக்கின்றனவா என்று எனது நண்பர்களாகிய வி.வி. ஸ்ரீநிவாச ஐயங்கார், டபிள்யூ துரைசாமி ஐயங்கார் முதலியோரைக் கொண்டு பரீட்சிக்கச் செய்து, அவர்கள் கூறிய சில குறிப்புகளின்படி சில பாட்டுக்களை மாற்றினேன்.

இந் நாடகத்திற்கென்றே திரைகள் முதலியனவெல்லாம் காலத்திற்குத் தக்கபடி புதிதாகத் தயார் செய்ததை முன்பே தெரிவித்திருக்கிறேன். ஒரு நாள் விக்டோரியா ஹால் மேடையின் மீதே முழு ஒத்திகை வைத்துக்கொண்டு, அத்திரைகள் முதலியன வெல்லாம் சரியாயிருக்கின்றனவா என்று போட்டுப் பார்த்தோம். எங்களுக்குத் தயார் செய்த புதிய உடைகளையும் அணிந்து பார்த்தோம். அன்றுதான் எங்களுக்கு ஒரு புது கஷ்டம் தேன்றியது! பௌத்த சன்யாசிகளுக்குத் துவர் (காவி) ஆடைகளை யெல்லாம் சித்தம் செய்தோம் தக்கபடி; ஆயினும் அவைகளை அணியும் விதம் எங்களுக்குத் தெரியவில்லை ! அதன்பேரில், எனது நண்பராகிய பாலசுந்தர முதலியார் சிரமம் எடுத்துக் கொண்டு, ஒரு பௌத்த சந்நியாசியிடம் போய் அதை எப்படி அணிவது என்று கற்றுக்கொண்டு வந்து மற்ற ஆக்டர்களுக்கெல்லாம் கற்பித்தார்! இந்நாடகத்திற்கு முன்பாக முழு ஒத்திகை வைத்துக் கொண்டிராவிட்டால், இக்குறையை நாடக தினம்தான் கண்டுபிடித்துத் திகைத்திருப்போம்! ஆகவே, ஒவ்வொரு புதிய நாடகத்திற்கும் டிரஸ் ரிஹர்சல் “உடுப்புடன் ஒத்திகை” பார்க்க வேண்டிய