பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/647

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

632

நாடக மேடை நினைவுகள்


அதி அவசியம் என்பது என் முடிவான தீர்மானம். எங்கள் சபையின் ஆரம்பத்தில் சில வருஷங்கள் இவ்வாறு செய்து வந்தோம். பிறகு சோம்பேறித்தனத்தினாலோ அல்லது கர்வத்தினாலோ இந்த வழக்கத்தைச் சில வருடங்கள் விட்டிருந்தோம். இதன் பிறகு கட்டாயமாய் அப்படிச் செய்துதான் தீர வேண்டுமென்று எங்கள் சபையின் பொதுக்கூட்டத்தில் ஒரு சட்டம் ஏற்படுத்திக் கொண்டோம்.

இனி இந் நாடகத்தை முதன் முறை ஆடிய கதையை எழுதுகிறேன்.

இதைப் பகிரங்கமாக ஆட வேண்டுமென்று தீர்மானித்த பொழுது, எனது பால்ய நண்பர் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார், இவ்வளவு கஷ்டமெடுத்துக்கொண்டு சித்தம் செய்த நாடகத்தை, ஒரு வாரத்திற்குள் மூன்று நான்கு முறையாவது ஆடவேண்டும் என்று வற்புறுத்தினார்; அவர் இவ்வாறு கூறியபொழுது அது அவ்வளவு உசிதமாக எனக்குத் தோன்றவில்லை. நான் அதற்கு ஆட்சேபம் செய்ததும் எங்கள் நிர்வாக சபையார், மூன்று முறை போடவேண்டும் என்று தீர்மானித்தார்கள். இதுதான் முதல் முறை எங்கள் சபையானது, மதராஸ் டிராமாடிக் சொசைடியாரைப் போல் ஒரு நாடகத்தை எடுத்துக்கொண்டு ஒரு வாரத்திற்குள் அதை மூன்று நான்கு முறை ஆடத் தீர்மானித்தது. அங்ஙனமே இவ்வருடம், மூன்று முறை ஆடிய பிறகு எனது நண்பர் உத்தேசித்ததே சரி, நான் அதற்கு ஆட்சேபித்தது தவறு என்று கண்டேன். அவருடைய அபிப்பிராயத்தினின்றும் மாறுபட்டு, பிறகு அவர் கூறியதே சரியென்று நான் கண்ட பல விஷயங்களில் இது ஒன்றாம். இம்மாதிரி ஒரு நாடகத்தை எடுத்துக்கொண்டு, அதைப் பன்முறை ஆடுவதில் சில பெரும் நன்மை களுண்டு. அவற்றைப் பிறகு குறிக்கிறேன்.

இந்தப் “புத்தாவதாரம்” முதன்முறை ஆடியபொழுது மேன்மை தங்கிய சென்னை கவர்னர் அவர்கள் வரவேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். அவரும் அதற்கிசைந்தார். முதன்முறை ஆடியபொழுது அறுபத்து நான்கோ அறுபத்தைந்தோ ஆக்டர்கள் மேடையின் பேரில் வரவேண்டி வந்தது. இத்தனை ஆக்டர்களுக்கும், வேஷம் தரித்தாக வேண்டு