பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/648

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

633


மெயென்று, அத்தனை ஆக்டர்களையும் காலையிலேயே விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு வரும்படி செய்து, கடைசியாக மேடையின் மீது அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்களை யெல்லாம் சொல்லிக் கொடுத்து, பதினோரு மணிக்கெல்லாம் (என் செலவில்) அவர்களைப் போஜனம் செய்யச் சொல்லி உடனே வேஷம் பூண ஆரம்பம் செய்தேன். அவ்வளவு சீக்கிரம் ஆரம்பித்தும் வேஷங்களெல்லாம் சரியாக 51/2 மணிக்குத் தான் முடிந்தன. மேற்சொன்னபடி செய்திராது வழக்கம் போல் இரண்டு அல்லது மூன்று மணிக்கு ஆரம்பித்திருந்தால், நாடக ஆரம்பத்திற்கு ஏற்படுத்திய தவணை கடந்து இரண்டு மணிக்குப் பிறகே நாடகம் ஆரம்பித்திருப்போம்! கவர்னர் அவர்களும் சரியாக 51/2 மணிக்கெல்லாம் வர, உடனே மணிப்பிரகாரம் ஆரம்பித்தோம்.

நாடகம் மிகவும் நன்றாயிருந்ததென, கவர்னர் அவர்கள் உட்பட எல்லோரும் மெச்சினர். அதைப்பற்றி நான் இங்கு எழுதப் போகிறதில்லை. அதிலுள்ள குற்றங் குறைகளை மாத்திரம் எடுத்து எழுதுகிறேன். முதலில் ஐந்தரை மணிக்கு ஆரம்பித்த நாடகமானது பத்தரை மணிக்கு முடிந்தது! இது பெரும் தவறாகும். சாதாரணமாக ஒவ்வொரு புதிய நாடகத்தை நான் எடுத்துக் கொள்ளும் பொழுதும், கடைசி ஒத்திகைகளில், ஒவ்வொரு காட்சியும், இத்தனை நிமிஷம் பிடிக்கிறது என்று குறித்துக் கொண்டு போய், மொத்தத்தில் நாடகமானது இத்தனை மணி பிடிக்கும் என்று தீர்மானிப்பது வழக்கம். சில நாடகங்களை ஆக்டர்கள் வளர்த்தி விடுகிறார்களென்று, நான்கு மணி நேரத்திற்கு மேல் சாயங்கால ஆட்டங்கள் செல்லக் கூடாதென்று எங்கள் சபையில் ஒரு சட்டமும் ஏற்படுத்தினோம். இதைக் கடந்து இதற்கு மேல் ஒரு மணி சாவகாசம் பிடித்தது இந்நாடகம். கவர்னர் அவர்கள், பொறுமையுடன், நான்கு மணி நேரம் அதாவது இரவு 91/2 மணி வரையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். அதற்கு மேல் இருப்பது கஷ்டமாயிருக்கிறதென நாடகத்தைப் பற்றி ஏதோ புகழ்ச்சியாக, எங்கள் சபையின் பிரசிடெண்டவர்களிடம் சொல்லிவிட்டு விடை பெற்றுப் போனார். அதற்குக் கொஞ்சம் முன்பாக எங்கள் சபையின் வைஸ் பிரசிடெண்