பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/649

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

634

நாடக மேடை நினைவுகள்


டாகிய எனது பால்ய நண்பர் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரிடம் வேடிக்கையாக, “நாடகத்தின் முடிவைப் பார்ப்பதற்கு, நான் வீட்டிற்குப் போய் சாப்பிட்டுவிட்டு வரலாம் போலிருக்கிறதே” என்று சொன்னாராம்! இவ்வளவு நேரம் இந் நாடகத்தை நீடிக்கச் செய்தது பெரும் தவறாகும். இரண்டாம் முறை இந்நாடகத்தை ஆடியபொழுது குறைக்க வேண்டிய பாகங்களை யெல்லாம் குறைத்து 4 மணி நேரத்திற்குள் முடியும்படி செய்தேன். முதன் முறை இந்நாடகம் அவ்வளவு நீடித்ததற்குக் காரணம், காட்சிக்கும் காட்சிக்கும் இடையில் இண்டர்வெல் அதிகமானதேயாம். ஒவ்வொரு காட்சியும் இத்தனை நிமிஷம்தான் பிடிக்கும் என்று கணக்குப் போட்டவன், இந்த இண்டர்வெல்களை கவனிக்க மறந்தேன். இரண்டு மூன்று முறை உடனே ஆடியபடியால், முதன்முறை நேர்ந்த இக்குறையைத் தீர்த்துக் கொள்ள மிகவும் அனுகூலமாயிருந்தது.

இம்முறை இந் நாடகத்தை ஆடியதில் இன்னொரு முக்கியக் குறை என்னவென்றால், காட்சிகளுக்கு எல்லாம் தக்கபடி திரைகள் முதலியன ஏற்படுத்தியும், ஒவ்வொரு காட்சிக்கும் இன்னின்னபடி வெளிச்சம் இருக்க வேண்டுமென்று நாங்கள் ஏற்பாடு செய்யாமற் போனதே. இதைக் கண்டுபிடித்து எனக்கு அறிவித்தவர், மதறாஸ் டிராமாடிக் சொசைடியின் அங்கத்தினரும் எனது நண்பருமான மிஸ்டர் லெஸ்லி கோல்ஸ் என்பவரே. இவர் தனது சொசைடியிலிருந்து என் வேண்டுகோளின்படி எங்களுக்கு ஸ்டேஜ் லைட்களை உதவியிருந்தார். அவரையும் அவரது மனைவியாரையும் நாடகத்திற்கு வரும்படி இரண்டு டிக்கட்டுகள் வாங்கி அனுப்பியிருந்தேன். அவர்களிருவரும் வந்திருந்து நாடகம் பார்த்தனர். மறுதினம் மிஸ்டர் லெஸ்லி கோல்ஸ், எனக்குத் தான் பார்த்ததைப் பற்றி, ஏதோ சிலாக்கியமாக எழுதினார். அக் கடிதத்திலுள்ள ஒரு வாக்கியத்தை மாத்திரம் இங்கு மொழிபெயர்த்து எழுதுகிறேன். “நீர் நாடகத்தை எழுதி ஒத்திகை செய்து, முக்கிய பாகத்தை ஆக்டு செய்து, ஸ்டேஜ் மானேஜராக இருந்து, எல்லாக் காரியங்களையும் பார்த்துக்கொண்டு, இவ்வாறு பல காரிங்களையும் ஒருவனாக வகித்தது, எனக்கு மிகவும் ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் தருகிறது” என்று எழுதினார். அக்