பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/661

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



646

நாடக மேடை நினைவுகள்


இவ் வருஷத்திய புது நிகழ்ச்சிகளுள் எஸ்பிளநேட் தியேட்டரில், எங்கள் சபை ஒரு நாடகம் நடத்தியதாகும். ராயல் தியேட்டரைப் போல் அவ்வளவு சௌகர்யமாயில்லாவிட்டாலும் விக்டோரியா பப்ளிக் ஹாலைவிட, இது மிகவும் சௌகர்யமாகத்தானிருந்தது. அன்றியும் அரியக் குடி ராமாநுஜ ஐயங்கார் அவர்களாலும் முசிரி சுப்பிரமணிய ஐயர் அவர்களாலும் இரண்டு சங்கீதக் கச்சேரிகளை எங்கள் சபையில் ஏற்பாடு செய்து பார்த்தோம். இவ்விரண்டிலும் எங்கள் அங்கத்தினர் அவ்வளவாக சிரத்தை எடுத்துக் கொள்ளாதபடியால், இப்படிப்பட்ட கச்சேரிகளை வைப்பதை இதன் பிறகு விட்டோம்.

28ஆவது அத்தியாயம்

னி 1927ஆம் வருஷத்திய நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறேன்.

அவற்றுள் முக்கியமாகக் குறிக்க வேண்டியது எங்கள் சபையார் சென்னையைவிட்டு, மறுபடியும் வெளியூர்களுக்குப் போய் நாடகங்கள் நடத்தியதேயாம். 1922ஆம் வருஷம் கடைசியாக திருநெல்வேலி, திருவனந்தபுரம் போயிருந்ததைப்பற்றி நான் முன்பே எழுதியிருக்கிறேன். மறு வருடம் ரங்கூனுக்குப் போகலாமா என்கிற பேச்சு வந்து, அது தடைப்பட்டது. அவ்வருஷம் எனதுயிர் நண்பர் என்னையும், எங்கள் சபையையும் இவ்வுலகையும் விட்டுச் சென்றதும், இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அதன் பிறகு மூன்று நான்கு வருடங்களாக, வெளியூர்ப் பிரயாணம் என்கிற பேச்சே ஆரம்பிக்கப்படவில்லை. இவ் வருஷம் எனது நண்பர் எஸ். சத்தியமூர்த்தி ஐயர், தமிழ்க் கண்டக்டராகப் பொதுக் கூட்டத்தில் நியமிக்கப்பட்ட பிறகு, அவர் இவ் வருஷம் நமது சபை எங்காவது வெளியூருக்குப் போக வேண்டும் என்று பிரேரேபித்து தன் ஜனன பூமியாகிய புதுக்கோட்டைக்கும், மதுரைக்கும் போனால் நலமா