பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/662

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

647


யிருக்குமென்று சொன்னார். எனக்கு மாத்திரம் இந்தப் பிரயாணத்தினால் சபைக்கு லாபம் கிடைப்பது கஷ்டம் என்று மனத்தில் தோன்றியது. ஆயினும் முன்பு போல டி.சி. வடிவேலு நாயகர் கன்டிராக்டராக சபைக்கு 1,000 ரூபாய் கொடுக்க இசைந்திருக்கின்றார் என்று சத்தியமூர்த்தி ஐயர் கூறவே, நாம் இதைத் தடுப்பானேன், சபைக்கு ரூபாய் 1,000 வருவதற்குத் தடங்கலாக இருப்பானேன் என்று சும்மா இருந்துவிட்டேன். அதன் பேரில் சபையார், புதுக்கோட்டையில் நான்கு நாடகங்களும், மதுரையில் ஐந்து நாடகங்களும் ஆட வேண்டுமென்று தீர்மானித்தார்கள். அப்பொழுது புதுக்கோட்டைக்கு நேராக ரெயில் இல்லாதபடியால், தஞ்சாவூர் வழியாக, பஸ் ஏறிச் சென்றோம்.

புதுக்கோட்டையில் ஆடிய நான்கு நாடகங்களில் முதன் மூன்றாகிய, மனோஹரன், காலவ ரிஷி, லீலாவதிசுலோசனா நாடகங்களில் நானும், எனது புதிய நண்பர் கே. நாகரத்தினம் ஐயரும் ஆடினோம். அவர் கவர்ன்மெண்ட் உத்தியோகத்தில் அமர்ந்திருந்தபடியால் மூன்றாவது நாடகமானதும் சென்னைக்குத் திரும்பி வரவேண்டிய திருந்தது. கடைசி நாடகமாக ஹரிச்சந்திர நாடகத்தை வைத்துக்கொண்டோம். இதில் எனது நண்பர் டாக்டர் ஸ்ரீனிவாச ராகவாச்சாரியும், வடிவேலு நாயகரும் முக்கியப் பாகங்கள் எடுத்துக் கொண்டனர். பல காரணங்களால் இந்த நாடகங்களுக்கு எங்கள் கண்டக்டராகிய சத்தியமூர்த்தி ஐயர் எண்ணியபடி அவ்வளவு பணம் வசூலாகவில்லை. மதுரைக்குப் போனால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்று ஆக்டர்களைத் தேற்றினார். இவ்விடம், கே. நாகராஜ ஐயர், வி. சா. கெ. ச. சோமசுந்தரம் செட்டியார், திவான்பஹதூர் முத்தையா செட்டியார் அவர்கள், எங்கள் சபையோருக்கு விருந்தளித்தனர்; அன்றியும் எங்கள் சபைக்கு ஒரு வந்தனோபசாரப் பத்திரமும் கொடுக்கப்பட்டது. இவ்விடம் மேற்சொன்ன நான்கு நாடகங்களையும் முடித்துக் கொண்டு, பஸ் மூலமாகத் திருச்சிராப்பள்ளிக்குப் போய் அங்கிருந்து ரெயிலேரி மதுரையை அடைந்தோம். அன்று காலை புதுக்கோட்டையை விட்டுப் புறப்படும் பொழுது எனக்கு உடம்பு சொஸ்தமில்லாதிருந்தது. அதற்கு