பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/663

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



648

நாடக மேடை நினைவுகள்


முக்கியக் காரணம், அதற்கு முந்திய தினம் நான் மழையில் நனைந்ததே என்று நினைக்கிறேன். புதுக்கோட்டைக்கு வரும்பொழுதே எனது இடது காலில் ஒருவிதமான சிரங்கு இருந்தது; மழை நீரில் அப் புண்ணுடன் நடந்து வரவே, மறுநாட் காலை எனக்கும் கொஞ்சம் ஜ்வரம் போலிருந் தது. அதைக் கவனியாது, மற்றவர்களுடன் பஸ் ஏறிப் புறப்பட்டேன். சாயங்காலம் மதுரையில் ரெயிலிலிருந்து இறங்கும்பொழுது எனக்கு ஜ்வரம் ஆரம்பித்து விட்டது. என்னடா இது, யாழ்ப்பாணத்துக் கதை மறுபடியும் ஆகாதிருக்க வேண்டுமே யென்று, மீனாட்சி அம்மனைப் பிரார்த்தித்துக்கொண்டு இறங்கினேன். ரெயில் ஸ்டேஷனில், எங்களை வரவேற்பதற்காக எனது பழைய நண்பராகிய பி. ராமமூர்த்தி பந்துலு, மாணிக்கவாசகம் பிள்ளை முதலியோர் வந்திருந்தனர். எனக்கு உடம்பு அசௌக்கியமாயிருப்பதைத் தெரிவிக்கவே, எனது நண்பர்கள் என்னை உடனே, எங்களுக்கு ஏற்படுத்திய ஜாகையாகிய மதுரை கலாசாலை ஹாஸ்டலுக்குக் கொண்டுபோய் விட்டனர். அன்று சயங்காலம், பிறகு எனக்கு நண்பர்களான, மதுரை டிராமாடிக் கிளப் அங்கத்தினர் பலரை அதன் கண்டக்டராயிருந்த ராமமூர்த்தி பந்துலு அவர்கள் இன்னாரின்னாரென எனக்குத் தெரிவித்தார். அச்சமயம் பார்த்ததாக அவர்களுள் டாக்டர் சீதாராமன் என்பவர் ஒருவரை மாத்திரம் ஞாபகமிருக்கிறது. மற்றவர்களெல்லாம் எனக்கு ஞாபகமில்லாதது அப்பொழுது எனக் கிருந்த தேகஸ்திதி பற்றியிருக்கலாம். பிறகு உங்களுடன் சாவகாசமாய்ப் பேசுகிறேன் என்று அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பிவிட்டு, ஏதோ கொஞ்சம் கஞ்சி சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டேன். அன்று வெள்ளிக்கிழமை; ஏதாவது புதிய ஊருக்குப் போனால் வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்யாதிருப்பதில்லை நான்; ஆயினும் அன்று எனக்கு இருந்த தேக ஸ்திதியில் துவாதசாந்தஸ்தலம் என்று சொல்லப்படும் முக்கிய க்ஷேத்திரமாகிய மதுரைக்கு வந்தும் என் துர் அதிர்ஷ்டத்தால் அன்று நான் மீனாட்சி சுந்தரேஸ்வரர்களைத் தெரிசனம் செய்யக் கொடுத்து வைக்காமற் போயிற்று. நான் போவதற் கில்லாவிட்டாலும் எனது நண்பர் வடிவேலு நாயகரை அழைத்து, மற்ற எல்லா