பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/676

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

661


இவ் வருடம், எங்கள் சபையின் அங்கத்தினருள் ஒருவராயிருந்த திவான் பகதூர் சர். பி. ராஜகோபாலாச்சாரி யார் அவர்கள் காலமானது குறிக்கத்தக்கதாம். இவர் வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்தது முதல் எங்கள் சபையைச் சேர்ந்திருந்தார். எங்கள் சடை தமிழ் நாடகங்கள் ஆடும் போதெல்லாம், இவரும் இவரது மனைவியாரும் தவறாமல் வருவது வழக்கம். இவர் எங்கள் சபையைப் பற்றி ஒரு முறை கூறிய ஒரு சமாச்சாரம் எனக்கு நினைவிற்கு வருகிறது. ஒருமுறை எங்கள் சபையின் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்து வியவஹாரங்களை நடத்தும் முறையைக் கண்டனர். சில நாட்களுக்கெல்லாம் சென்னையிலுள்ள பிரபல கிளப் ஒன்றின் பொதுக்கூட்டத்திற்கும் போயிருந்தார். அங்கு நடப்பதையும் பார்த்து, அதற்கு வந்திருந்த ஒருவரிடம், “நான் என் ஆயுளில் பல பொதுக்கூட்டங் களுக்குப் போயிருக்கிறேன்; ஆயினும் சுகுண விலாச சபையில் நடப்பது போல் விமரிசையாக வேறெங்கும் நடக்கக் கண்டேனில்லை” என்று கூறினாராம். இதை எனது நண்பர்களில் ஒருவர் உடனே எனக்குத் தெரிவித்தார். அன்றியும் இவர் பென்ஷன் வாங்கிக் கொண்ட பிறகு அநேக சபைகளிலிருந்து நீங்கிய போதிலும் சுகுண விலாச சபையை விட்டு மாத்திரம் நீங்கவில்லை, தன் ஆயுள் பரியந்தம்.

இவ் வருஷத்திய வருடாந்தரப் பொதுக்கூட்டத்தில் எங்கள் சபையார் என்னை சபைக்கு டிராமாடிக் டைரெக்டராக நியமித்தனர். இதைப் பற்றிச் சில விஷயங்கள் எழுத வேண்டியவனாயிருக்கிறேன். சபை ஆரம்பமானது முதல், எங்கள் சபையின் இரண்டாம் ஆண்டுக் கொண்டாட்டம் வரையிலும், (ஒரு வருடம் தவிர), அதன் பிறகு இரண்டு மூன்று வருடங்களும், நான் தமிழ் நாடகங்களுக்குக் கண்டக்டராயிருந்து நடத்தி வந்தேன் என்பது இதை வாசித்து வரும் எனது நண்பர்கள் அறிந்த விஷயமே. இச் சமயங்களிலெல்லாம், எங்கள் சபையின் ஆக்டர்கள் அனைவருக்கும் திருப்திகரமாய் நடந்துகொண்டு வந்தேன் என்று சொல்வது தவறாகும். என்னிடமிருந்த பிடிவாதம், முன் கோபம், பொறுமையின்மை முதலிய துர்க்குணங் களைப் பற்றி நான் முன்பே எழுதியிருக்கிறேன். இவை