பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/678

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

639


முதலிய ஒவ்வொரு பாஷைக்கும் ஒவ்வொரு கமிட்டி ஏற்படுத்திப் பார்த்தார்கள். 1916ஆம் வருஷம் நான் கண்டக்டர் வேலையிலிருந்து நீங்கினபிறகு, மற்ற கண்டக்டர்கள் வந்த பிறகும் இக்குறை தீராதபடியால், ஒரு வருஷம் வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரை டிராமாடிக் டைரெக்டராக நியமித்தனர். 1921ஆம் வருஷம் நான் சபையின் டிரமாடிக் டைரெக்டராக நியமிக்கப்பட்டேன். இப் பிரயத்தனங்கள் எவையாலும் மேற்சொன்ன குறை தீர்ந்தபாடில்லை யென்றே நான் கூற வேண்டும். இக்குறைகளைத் தீர்க்க எங்கள் சபையார் நாளது வரையில் என்னென்னவோ சூழ்ச்சிகள் செய்து பார்க்கிறார்கள்; எதனாலும் பயனடையவில்லை. வியாதியொன்றிருக்க அதை அறியாது, ஔஷதங்கள் கொடுத்து என்ன பயனடையக்கூடும்? இதற்கு என் அபிப்பிராயப்படி எது தகுந்த சிகிச்சை என்பதைப் பற்றிப் பிறகு ஒரு சமயம் எழுதலாமென்றிருக்கிறேன்.

29ஆவது அத்தியாயம்

று வருஷமாகிய 1928ஆம் ஆண்டில் என்னைப் பற்றிய வரையில், நடந்த சம்பவங்களுள் ஒரு முக்கியமானதென்ன வென்றால், இவ்வருஷம் பிப்ரவரி மாதம் முதல் தேதி, எனக்கு ஐம்பத்தைந்து வயது பூர்த்தியாகி, அவ்வயதுக்கு மேல் கவர்ன்மென்ட் உத்தியோகத்தில் சாதாரணமாக ஒரு வரும் இருக்கக்கூடாது என்கிற சட்டத்தின்படி, நான் ஸ்மால் காஸ் கோர்ட்டு ஜட்ஜ் வேலையிலிருந்து விலக வேண்டி வந்ததேயாம். ஆக மொத்தம் சுமார் 4 வருடங்கள்தான் நான் ஜட்ஜ் வேலையிலிருந்தேன்; இதனிடையில் சில காலம் ஸ்மால் காஸ் கோர்ட்டு சீப் ஜட்ஜாகவும் சென்னை சீப் பிரசிடென்சி மாஜிஸ்டிரேட் ஆகவும் வேலை பார்த் தேன். நாடக மேடை நினைவுகளைப் பற்றி எழுதப் புகுந்தவன், இதை இங்கு எழுதுவானேன் என்று இதை வாசிக்கும் எனது நண்பர்கள் இங்கொரு கேள்வி