பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

53


முக்கியமான இரண்டு ஸ்திரீ பாத்திரங்களை, ஜெயராம நாயகரும், சுப்பிரமணிய ஐயரும் எடுத்துக் கொண்டனர். என்னுடன் அக்காலத்தில் நடித்தவர்களுள் அநேகர் அல்ப ஆயுசுடையவர்களாய் மறித்தது போல் அல்லாமல், பரமேஸ்வரனுடைய கிருபையினால் இன்னும் இவர்களிரு வரும் உயிருடனிருக்கிறார்கள். இவர்களிருவர்களைப் பற்றிச் சற்று விவரமாய் எழுத வேண்டியிருக்கிறது.

இவ்விருவர்களுள் ஜெயராம் நாயகர், கதாநாயகியாகிய சுந்தரி வேஷம் தரித்தார். நான் முதல் முதல் எழுதிய நாடகமாகிய “புஷ்பவல்லி” என்னும் நாடகத்திலும் புஷ்பவல்லி என்னும் கதாநாயகி வேஷம் பூண்டனர். அன்றியும் 1895ஆம் வருஷம் வரையில் எங்கள் சபையில், அயன் ஸ்திரீபார்ட் என்று சொல்லும்படியான, முக்கிய ஸ்திரீ வேஷம் தரித்தவர் இவரே. எனது மூன்றாவது நாடகமாகிய “லீலாவதி - சுலோசனா அல்லது இரண்டு சகோதரிகள்” என்னும் நாடகத்தில் இவர் லீலாவதியாக நடித்தனர். அந்த நாடகம் இவருக்கென்றே நான் எழுதியது. (இந்தக் கதையை பிறகு சவிஸ்தாரமாகக் கூறலாமென்றிருக்கிறேன்.) இவர், எனது நாடகங்களுக்குள், ‘யயாதி’ என்னும் நாடகத்தில் சர்மிஷ்டையாகவும், ‘சாரங்கதரன்’ என்னும் நாடகத்தில் சித்ராங்கியாகவும் நடித்துள்ளார். இவருக்கு சபையின் முதல் நான்கைந்து வருஷங்கள்வரையில் சபையின் ஹீரோயின் என்று பெயர் - அதாவது சபையின் நாடகங்களில் முக்கிய ஸ்திரீ வேடம் பூணுபவர் என்று பொருள்படும்.

இவர் அக்காலத்தில் மிகவும் ஒல்லியா யிருந்தார். என்னைப் பார்க்கிலும் ஒரு வருடம் வயதில் குறைந்தவராயிருந்த போதிலும் அரும்பைப் போல முகத்தில் மீசையுண்டு. இவருக்கு முக்கியமான கஷ்டமென்ன வென்றால். ஸ்திரீ வேஷம் தரிக்கும் ஒவ்வொரு சமயமும் இதை எடுத்துவிட வேண்டுமென்பதே! முதலில் இதை எடுத்துவிடுவது இவரது தந்தைக்குத் தெரியாமலிருந்தது. பிறகு இவர் தந்தை இதற்கு ஆட்சேபணை செய்ததே இவர் ஸ்திரீ வேஷம் பூணுவதை விட்டதற்கு ஒரு முக்கியமான காரணமாம். குரல் ஸ்திரீயின் குரலைப்போல் மெல்லியதாயிருந்தது. ஆயினும் சங்கீதத்தில் இவர் அவ்வளவாகப் பெயர். எடுக்கவில்லை . இவர் ஸ்திரீ