பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/684

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

669


இவ்வருடம் எனது பால்ய நண்பர் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் ஆங்கிலத்தில் எழுதிய நாடிகைகள் பலவற்றை மொழிபெயர்த்ததாக முன்பே தெரிவித்திருக்கிறேன். இந்த நாடிகைகளையெல்லாம் நான் மொழி பெயர்த்தபொழுது, எனக்குச் சந்தேகமாயிருக்கும் இடங்களிலெல்லாம் குறிப்பிட்டு, பிறகு அவற்றை எனது நண்பரிடம் கொண்டு போய், அவரது அபிப்பிராயத்தைக் கேட்டு, திருத்தின பிறகுதான், அவைகளை ஒவ்வொன்றாக அச்சிட்டேன். இப் புத்தகங்களுள் ஒன்றில் முகவுரையில் நான் எழுதிய படி, சில சமயங்களில், ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியின் ஆங்கில நாடகங்களை மொழி பெயர்ப்பதைவிட, இவரது நாடிகைகளை மொழி பெயர்ப்பது அதிக, கஷ்டத்தைத் தந்தது! இம் மொழி பெயர்ப்புகளுள் சில எங்கள் சபையாராலும் ஆடப்பட்டிருக்கின்றன; பள்ளிக் கூடத்தில் வாசிக்கும் சிறுவர்கள் சங்கங்களின் வருடாந்தரக் கொண்டாட்டங்களில், தமிழில் ஏதாவது சிறு நாடிகைகள் ஆட வேண்டுமென்று விரும்பினால், இவைகள் உபயோகப்படும் என்று நினைக்கிறேன். எனது நண்பர் எழுதியுள்ள “தாமுவை வழிக்குக் கொண்டு வந்தது", (Domestication of Damoo) “ஆடி ஆகும் வரையில் பொறுங்கள்” (Wait for the stroke) எனும் இரண்டை மாத்திரம் இன்னும் நான் மொழி பெயர்க்கவில்லை. காலம் வாய்த்தால் அவைகளையும் மொழிபெயர்த்து என் பால்ய நண்பருக்கு நான் செலுத்த வேண்டிய பெருங்கடனைக் கொஞ்சம் தீர்க்கலாமென்றிருக்கிறேன்.

இவ் வருஷம் ஆகஸ்டு மாதம் 28ஆம் தேதி எங்கள் சபையின் ஆதரவிலும் முன்னிலையிலும், குப்பி நாடகக் கம்பெனியார், வால்டாக்ஸ் ரோடு நாடக சாலையில், “ராஜபக்தி” என்னும் நாடகத்தைக் கன்னட பாஷையில் நடத்தினார்கள். இதற்காக எங்கள் சபையார் அக் கம்பெனியாருக்கு 150 ரூபாய் பெரும்படியான ஒரு வெள்ளிக் கோப்பையைப் பரிசாக அளித்தனர். இந் நாடகத்தைத்தான் பிறகு என் இளைய நண்பர் வி.சி. கோபாலரத்தினம் ஐயங்கார் தமிழில் மொழி பெயர்த்தனர்.

அன்றியும் இவ் வருஷம் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி ராயல் தியேட்டரில், எங்கள் சபையில் பல வருடங்களாக