பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/685

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



670

நாடக மேடை நினைவுகள்


அங்கத்தினராயிருந்து, தெலுங்குப் பாஷையில் பன்முறை நாடகங்களில் நடித்து வந்த எள். வெங்கடாசல ஐயரடைய, “ராதா மாத மந்திரம்” என்னும் தர்ம கைங்கர்யத்திற்காக எனது “மனோஹரன்” நாடகம் ஆடப்பட்டது. அதன் பொருட்டு எனது தேக கஷ்டத்தையும் பாராமல், அந்நாடகத்தில் நான் மனோஹரனாக நடித்தேன். என் இள வயதில் இருந்த உற்சாகத்துடன் இப்பாத்திரத்தை நான் நடிப்பதற்கு ஏலாமற் போனபோதிலும், எனது பழைய நண்பருக்காக உழைப்பதற்குப் போதுமான தேக வலியை இன்னும் நமக்கு ஈசன் அருளியிருக்கிறாரே என்று சந்தோஷப்பட்டேன். செலவு போக இதில் வந்த லாபமாகிய ரூபாய் 383-4-0 அவருக்கு மேற்சொன்ன தர்ம கைங்கர்யத்திற்காகக் கொடுத்தோம். இந்த வெங்கடாசல சாஸ்திரியார், (இவருக்கு ஏர்ரையா என்று எங்கள் சபையில் பெயர் வழங்குகிறது) என்னைவிட வயதில் பல ஆண்டுகள் மூத்தவராயினும், இன்னும் எங்கள் சபைக்கு நன்றி மறவாமல், எப்பொழுது வேண்டிய போதிலும், நாடகப் பாத்திரங்களைத் தரித்து வருகிறார்.

இவ்வருஷம் எங்கள் சபையில் “நாடகமாடுபவர்க்கு உபயோகமான சில குறிப்புகள்” என்கிற விஷயத்தைப் பற்றி ஒரு உபன்யாசம் செய்தேன். இந் நாடக மேடை நினைவுகள் முடிந்தவுடன் அவகாசமிருக்குமாயின் அவைகளைப் பற்றி எழுதலாமென்றிருக்கிறேன். இவ்வருஷம் ஜார்ஜ் டவுனில், ஆர்ட்னென்ஸ் லைன்ஸ் (Ordnance lines) என்னும் இடத்தில் எங்கள் சபையின் நாடகசாலையும் இருப்பிடமும் கட்டுவதற்காக இடம் கிடைக்குமா என்று வெகு பிரயத்தனப்பட்டுப் பார்த்தோம்; பிரயோஜனம் இல்லாமற் போயிற்று; “வருந்தி அழைத்தாலும் வாராதவரா, பொருந்துவன போமினென்றாற் போகா!” ஈசன் கருணையினால் இப்பிரயத்தனம் எப்பொழுது கைகூடுமோ அறியேன்.

அன்றியும் இவ்வருஷம் எங்கள் சபையின் “சுவிநேர் புஸ்தகம்” (ஞாபகார்த்த புஸ்தகம்) ஒன்று பதிப்பித்தோம். அதில் எங்கள் சபை, சென்ற முப்பத்தேழு வருஷங்களாக நடத்திய விஷயங்களை வெளியிட்டது மன்றி, எங்கள்