பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/695

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

680

நாடக மேடை நினைவுகள்


யிலுள்ள எனது நண்பர்களும் இங்கிருந்து அவ்வளவு தூரம் போய் ஆக்டு செய்தார்களே என்ன பிரயோஜனம் என்றும் ஏளனம் செய்யக்கூடாது என்பதுதான் ஜகதீசனுக்கு என் முக்கியப் பிரார்த்தனையாயிருந்தது. மதுரை ஸ்டேஷனுக்கு நான் போய் இறங்கியவுடன், மா. சுப்பிரமணிய ஐயரை முன்னிட்டு என்னை வரவேற்ற புதிய நண்பர்களின் பிரீதியானது அந்தச் சந்தேகங்களில் கால்பங்கை நிவர்த்தி செய்தது; அன்று சாயங்காலம், டிராமாடிக் கிளப்பார் இருப்பிடமாகிய விக்டோரியா எட்வர்ட் ஹாலுக்குப் (Victoria Edward Hall) போய் நான் மற்ற ஆக்டர்களைச் சந்தித்த பொழுது, இன்னும் கால்பங்கு தீர்ந்தது; இவ்விடத்தில் நாங்கள் ஆடிய முதல் நாடகமாகிய “காலவ ரிஷி” நாடகத்திற்கு ஆரம்பத்தில் தெய்வ ஸ்தோத்திரம் செய்த வுடன், மற்றுமுள்ள அரைப் பங்கு சந்தேகமும் அறவே நீங்கியது.

நான்கு நாள் முன்னதாகப் போய்ச் சேர்ந்தபடியால், அந்த நான்கு தினமும், எனது புதிய நண்பர்களுடன் இரண்டு நாடகங்களுக்கும் ஒத்திகை நடத்தினேன். எனது புதிய நண்பர்களாகிய இந்த டிராமாடிக் கிளப் ஆக்டர்கள் மிகவும் உற்சாகத்துடன் ஒத்திகைகளுக்கு வந்து கற்று வந்தனர். நன்றாய் நடிக்க வேண்டுமென்னும் அவர்களுக்கிருந்த ஊக்கமானது, அவர்களுக்கு நன்றாய்க் கற்பிக்க வேண்டுமென்னும் உற்சாகத்தை எனக்குத் தந்தது. சுகுண விலாச சபை ஆரம்பித்தபொழுது என்ன உற்சாகத்துடன் ஒத்திகைகள் நடத்தினேனோ அத்தனை உற்சாகத்துடன் இங்கும் நடத்தினேன் என்றே சொல்ல வேண்டும் இந்த ஒத்திகைகளை நடத்திய இடமாகிய விக்டோரியா எட்வர்ட் ஹால் மேல் மாடியானது, மிகவும் விசாலமானதாயிருந்த போதிலும், ஒரு கஷ்டம் மாத்திரமிருந்தது. இக் கட்டடத்தின் கீழே சாயங்காலங்களில் ஒரு சினிமா நடந்தேறி வருகிறது; சினிமா ஆரம்பமாகு முன்னும், இடைக்காலங்களிலும் அதைப் பார்க்க வரும் பாமர ஜனங்கள், பெருங் கூச்சலிடு கின்றனர்; இதனால் நிம்மதியாக ஒத்திகை நடத்துவது கஷ்டமாயிருந்தது; தற்காலத்திலும் இக்கஷ்டம் இருக்கின்றது.

அக்காலம் இந்த கிளப்பில் கண்டக்டராயிருந்த ஸ்ரீமான் தாதாச்சாரியார் அவர்கள் அனுமதியின் பேரில், நான்