பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/701

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

686

நாடக மேடை நினைவுகள்


இவர், கம்பீரமான உருவத்தையும் தோற்றத்தையும் உடையவர்; கண்கள் விசாலமாயும் சற்றுப் பெருத்தும் இருக்கும்; இதனால் இவருக்கு ஒரு கஷ்டமுண்டு; “திருடனை ராஜ முழி முழிக்கச் சொன்னால் என்ன செய்வான்?” என்பதற்கு நேர் விரோதமாக, ராஜ விழியை யுடைய இவருக்கு, திருடனைப் போல் விழிப்பது கடினமாயிருக்கிறது. ஆக்டர்களுக்கிருக்க வேண்டிய முக்கியமான குணம் இவரிடம் ஒன்றுண்டு. ஏதாவது ஒன்றைச் சொல்லிக் கொடுப்பதென்றால், ஏறக்குறைய ஒரு முறைக்கு மேல் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை; எவ்வளவு கஷ்டமான பாகமாயிருந்த போதிலும், இரண்டாம் முறைக்குமேல் சொல்லவேண்டிய நிமித்தியதில்லை. சங்கீதத்தில், முக்கியமாக இந்துஸ்தானி சங்கீதத்தில் நல்ல ராக ஞானமுடையவர்; ஹார்மோனியம், தபேலா முதலிய பக்கவாத்தியங்களையும் வாசிக்கும் திறமுடையவர். இவர் இன்று சித்திரசேனனாக மிகவும் நன்றாய் நடித்தார் என்பது என் தீர்மானம். ஆயினும் மதுரைவாசிகள் இவரை அதிகமாக சிலாகிக்கவில்லை என்பது என் அபிப்பிராயம்; “உள்ளூர் மாடு உள்ளூரில் விலை போகாது” என்னும் காரணத்தினாலோ? நான் அறியேன். இவரிடம் இன்னொரு அரிய குணம் என்னவென்றால், இவர் இச்சபையில் சாதாரணமாக முக்கிய “ராஜபார்ட்” ஆக்டு செய்து வந்தபோதிலும், எந்த அற்ப வேஷத்தைக் கொடுத்தபோதிலும், எடுத்துக்கொண்டு, அதற்கிசைய வேஷம் தரித்து நடித்து வருவார்! இதைப்பற்றிப் பிறகு நான் எழுத வேண்டி வரும்.

அன்று கதா நாயகியாகிய, சித்திரசேனன் மனைவியரில் மூத்தவளாகிய சந்தியாவளி வேடம் பூண்டவர், எனது புதிய நண்பர்களில் ஒருவராகிய சோமநாத ஐயரே. நான் மதுரைக்குப் போய்ச் சேர்ந்தவுடன் இவரைப்பற்றிதான் முதலில் நான் விசாரித்தேன். “இரண்டு நண்பர்கள்” நாடகத்தில், என்னுடன் சத்யவதியாக, யார் நடிக்கப் போகிறதென எனது நண்பர் நாகரத்தினத்தைக் கேட்ட போது, இவர்தான் என்று சோமநாத ஐயரைத் தெரிவித்தார். “சத்யவதி” நான் சிருஷ்டித்த ஸ்திரீ பாத்திரங்களில் ஒரு முக்கியமானதாம்; அந்தப் பாகத்தை நடிப்பது சுலபமல்ல;