பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/702

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

687


அன்றியும் என்னுடன் நடிப்பவர்கள் சரியாக இல்லா விட்டால், என்னால் சரியாக நடிக்க முடியாது என்பதை, இந்த நாடக மேடை நினைவுகள் வாசித்து வரும் எனது நண்பர்கள் இது வரையில் நன்றாய் அறிந்திருப்பார்கள். ஆகவே இவரைப்பற்றி நான் முதலில் விசாரிக்க வேண்டிய தாயிற்று. இவர் உருவத்தில் என்னைவிடக் கொஞ்சம் பருமனாயிருந்தபோதிலும், முகத்தில் ஸ்திரீகளுக்குரிய களையையுடையவர்; நன்றாகப் பாடும் சக்தி வாய்ந்தவர்; அன்றியும் ஏதாவது சொல்லிக் கொடுத்தால் உடனே அதை கிரஹித்துக் கொள்ளம் சக்தி வாய்ந்தவர்; சுப்பிரமணிய ஐயரிடம் இருப்பதுபோல் இவரிடமும், நாடகக் கலையை நன்றாய்க் கற்க வேண்டுமென்னும் அவாவுண்டு, ஆகவே இவருக்கு நான் ஒத்திகை செய்வது சுலபமாயிருந்தது. இவர் ‘காலவ ரிஷி’யில் சந்தியாவளியாக நன்றாய்ப் பாடி நடித்தார் என்பது என் அபிப்பிராயம்.

இந் நாடகத்தில், ஸ்ரீ கிருஷ்ணனுடைய பாகம் ஒரு முக்கியமானதென்பதை அதை வாசித்த எனது நண்பர்கள் அனைவரும் அறிவார்கள். சாதாரணமாகவே ஸ்ரீ கிருஷ்ணன் வேஷம் பூணுதல் எளிதல்ல அதிலும் நான் எழுதியபடி ஆக்ட் செய்வது, இன்னும் கொஞ்சம் கஷ்டம். இந்த வேடத்தை எனது புதிய நண்பர்களில் ஒருவராகிய பஞ்நாத ஐயர் பி.ஏ., பி.எல்., எடுத்துக் கொண்டு நன்றாய் நடித்தார். இவருக்கு இம்முறை அப் பாத்திரத்தை, என் அபிப்பிராயப்படி நடிக்கும் விதம் கற்பிக்க எனக்கு அவகாசமில்லாமற் போயிற்று. பிறகு இச் சபையார் எனது “சுபத்திரார்ஜுனா” என்னும் நாடகத்தை ஆடிய சமயம், இவருக்கு எனக்குத் தெரிந்தவரை ஸ்ரீ கிருஷ்ணனுடைய பாத்திரத்தை இவ்வாறு நடிக்க வேண்டுமென்று நான் கற்பிக்க, மிகவும் நன்றாக நடித்தார் என்பது, என்னுடைய அபிப்பிராயம் மாத்திர மன்று, எல்லோருடைய அபிப்பிராயமுமாம். ஸ்ரீ கிருஷ்ண பாத்திரத்தை அநேகர், அநேக சபைகளில் நடிக்க நான் பார்த்திருக்கிறேன். அநேக நாடகக் கம்பெனிகளிலும் பார்த்திருக்கிறேன்; ஆயினும் எனது நண்பராகிய அ. பஞ்சநாத ஐயரைப்போல் அக் கஷ்டமான பாத்திரத்தை மிகவும் பொருத்தமாக நடித்ததை, நான் பார்த்ததில்லை யென்றே சொல்ல வேண்டும். இந்த வேடத்திற்குத் தக்க