பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/704

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

689


இன்று மேனகை வேடம் பூண்டவர் கணபதி சுப்பிரமணிய ஐயர்; சிவபெருமானது திருக்குமாரர்கள் இருவருடைய பெயரையும் ஒன்றாகச் சேர்த்துத் தன் பெயராகவுடைய இவர், ஸ்திரீ வேஷத்திற்கு மிகவும் பொருத்தமான உருவமுடையவர்; ஆயினும் உரக்கப் பேசம் சக்தியும் பாடும் சக்தியும் இல்லாமையால், இவர் இன்று அவ்வளவாக சோபிக்கவில்லை என்பது என் அபிப்பிராயம். மேற்குறித்த குறைகளையும் நீக்கி உரக்கப் பேசச் செய்து, சங்கீதமும் கொஞ்சம் கற்பாராயின் இவர் நாடக மேடையில் நல்ல பெயர் எடுக்கக்கூடும்.

இந் நாடகம் சிறியதாயிருந்தபடியால், ஏறக்குறைய இரவு ஒன்றரை மணிக்கெல்லாம் முடிந்து விட்டது. நாடகம் முடிந்தவுடன் என் வழக்கம்போல், என் வேஷத்தைக் களைந்து விட்டு, சற்று நேரம் சிரமபரிகாரமாக மேடையின் மீது உட்கார்ந்து, என் புதிய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபொழுது, நாடகம் எப்படியிருந்தது என்று வந்திருந்தவர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள் என்ற கேட்க, அவர்களில் சிலர், “எல்லாம் நன்றாய்த்தான் இருந்தது, ஆயினும், உங்களுடைய பாகம் என்ன அவ்வளவு சிறியதா யிருந்ததே” என்று கேட்டனர். “அதற்கு நான் என்ன செய்வது? இதற்கெல்லாம் வட்டியுடன், நாளைய நன்றை ஆட்டமாகிய “இரண்டு நண்பர்களில்” முதல் முதல் கடைசிவரை ஆக்டு செய்து தீர்த்து விடுகிறேன்” என்று வேடிக்கையாய்ப் பதில் உரைத்தது எனக்கு ஞாபகமிருக்கிறது.

இனி இவ்வருஷம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி இங்கு நடந்த, “இரண்டு நண்பர்களை”ப்பற்றி எழுதுகிறேன். இந் நாடகம் மேடையில் ஆடுவதற்கு அதிகக் கஷ்டமானது என்பதை எனது நண்பர்கள் முன்பே அறிந்திருக்கிறார்கள் என நம்புகிறேன். அப்படியிருந்தும் இதை இச் சபையார், ஆதி முதல் அந்தம் வரை, ஏராளமாய் வந்திருந்த சபையோர் மெச்சும்படியாக நடித்தது, மிகவும் மெச்சத்தக்கதே. தேசாபிமானியாகிய ஹைகோர்ட் வக்கீல் வைத்தியநாத ஐயர் பி.ஏ., பி.எல்., அவர்கள் இதைப்பற்றி மறுநாள் - என்னிடம் மிகவும் புகழ்ந்து பேசியது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது; நான் நடித்ததைப்பற்றியும் ஏதோ