பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/705

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

690

நாடக மேடை நினைவுகள்


சிலாகித்துக் கூறினார். முதல் நாடகத்தில் நமக்கு அதிக பாகம் ஒன்றுமில்லையே, இதில் எப்படியாவது சபையோரைச் சந்தோஷிக்கச் செய்ய வேண்டுமென்று, நான் என்னால் இயன்ற அளவு பிரயத்தனப்பட்டேன். கடைசிக்காட்சிகளில் நான் பைத்தியக்காரனாக நடித்தது, எனக்கே கொஞ்சம் திருப்தியைத் தந்தது. சென்னையில் சுகுண விலாச சபையில் கடைசியாக இரண்டொரு முறை நடித்ததைவிட, இச்சமயம் நன்றாக நடித்தேன் என்பது என் அபிப்பிராயம். ஆயினும் வந்திருந்தவர்களுடைய மனத்தையெல்லாம் கவர்ந்தவர் என் அத்யந்த நண்பரான கே. நாகரகத்தினம் ஐயரே. இவர் மனோரமாவாக நடித்தது, மிகுந்த திருப்திகரமாயிருந்ததென எல்லோரும் ஒப்புக்கொண்டனர். இவர் தற்காலம் நடித்து வரும் பாத்திரங்களில் இது ஒரு முக்கியமானதென்பதற்குச் சந்தேகமில்லை. என்னுடன் சத்யவதியாக நடித்த சோமநாத ஐயர், நான் அவருக்குக் கற்பித்தபடி ஒன்றும் தவறாமல் நன்றாக நடித்தார். இவர் தேகாப்பியாசஞ் செய்து, சற்றுப் பருமனாயிருக்கும் தன் உருவத்தை மாத்திரம் கொஞ்சம் சரிப்படுத்திக் கொள்வாராயின், தென் இந்திய நாடக மேடையில் இவர் நற்பெயரெடுக்கலாம் என்பதற்கு ஐயமின்று. சுகுமாரனாக இன்று நடித்த மா. சுப்பிமணிய ஐயர், ஒத்திகைகளில் நடித்ததைவிட மிகவும் நன்றாய் நடித்தார். இதற்குக் காரணம் என்னவென்று பிறகு நான் வினவிய பொழுது; “உங்களுடன் நடிப்பதென்றால் எனக்கு ஒருவிதமான “குஷி” பிறந்து விட்டது. அதனால் தான் அப்படி நடித்தேன்” என்று விடை பகர்ந்தார். இதில் கொஞ்சம் முகஸ்துதியிருந்த போதிலும், கொஞ்சம் வாஸ்தவமுமிருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது; நாடக முழுவதிலும், ஏறக்குறைய எல்லாக் காட்சிகளிலும் என்னுடன் நடிக்கவேண்டி வந்த இவர், நன்றாய் நடிக்கும் போதெல்லாம் சபையோர் அறியாதபடி, “குட் குட்” (நல்லது நல்லது) என்று இவரை நான் உற்சாகப்படுத்திக் கொண்டு வந்தேன். நாடக மேடையில் நெடுநாள் பழகிய ஆக்டர்கள், மற்றவர்களை இவ்வாறு உற்சாகப்படுத்துவது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. இந்நாடகத்தில் கடைசிக் காட்சிகளில் நான் பித்தம் பிடித்தவனாக நடித்த காட்சிகளில், எனக்குப் பிற்காலம் இந்தப் பாத்திரத்தை நீங்கள் நடிக்க வேண்டி வரும். ஆகவே, பைத்தியக்காரனாக