பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/706

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

691


நடிப்பதை, சற்றுக் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூற, அவரும் மிகவும் கவனத்துடன் அதைப் பார்த்து வந்தார். நான் நாடக மேடையில் நடித்த பல பாத்திரங்களில் பெரும்பாலான வற்றை நன்றாய் நடிக்கக் கூடியவர்கள், என் அபிப்பிராயத்தில், இரண்டு மூன்று பெயர்கள் தானிருக்கின்றனர், அவர்களில் இவர் ஒருவராம்; இந் நாடகமாடிய பிறகு, பல நாள் இவருக்கு நான் கடிதம் எழுதும் போதெல்லாம் “என் பிரியமுள்ள சுகுமாரனுக்கு” என்றே இவருக்கு எழுதுவது வழக்கமாயிருந்தது.

ஒரு சிறு பாகமாயிருந்த போதிலும், நடிப்பதற்குக் கஷ்டமான நித்யானந்தன் பாகத்தை, ரங்க அய்யங்கார் என்பவர் நன்றாக நடித்தார். எனது பழைய நண்பராகிய எஸ். ராஜகணபதி முதலியாருக்குப் பிறகு இவர்தான் இப் பாத்திரத்தை வெகு விமரிசையாக நடித்தார் என்பது என் அபிப்பிராயம்; என்ன காரணத்தினாலோ, இவர் இதே நாடகத்தை மறுமுறை இச் சபையார் ஆடியபோது, இவர் இவ் வேஷத்தில் நன்றாய்ச் சோபிக்கவில்லை.

இந் நாடகத்தில் இன்னொரு கஷ்டமான வேடம், குரு நாதன் என்பதாம். இவன் ஒருவிதமான பித்துப் பிடித்தவன். இதை டாக்டர் நாராயண ஐயர், எல்.எம்.எஸ்., பி.எஸ்.சி. என்பவருக்குக் கொடுத்திருந்தது. இவர் இதை நன்றாய் நடிக்கமாட்டார் என்று அவரது மதுரை நேசர்கள் கூறினார்களாம். அதன்மீது பயந்தவராய், இதைப்பற்றி கே. நாகரத்தினம் ஐயரிடம் நான் மதுரை போய்ச் சேருமுன் தெரிவிக்க, அவர் நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம், என்று ஆறுதல் கூறினாராம்; இதையெல்லாம் எனது அத்யந்த நண்பர், நான் மதுரைக்குப் போய்ச் சேர்ந்ததும் என்னிடம் கூறி, “நீங்கள் அவரைச் சரிப்படுத்திவிடுவீர்கள் என்று நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன். ஆகவே எப்படியாவது அவரை நன்றாய் நடிக்கச் செய்வது உங்கள் பாரம்” என்று என்னிடம் கூறினார். அதன் பேரில், இவரை காலைகளில், தனியாக நான் இறங்கியிருந்த நாகரத்தினம் ஐயர் வீட்டிற்கு வரச்சொல்லி, இப் பாத்திரத்தை நடிக்கும் விதத்தைச் சொல்லிக் கொடுத்தேன். நாடக தினம் “இவர் இவ்வளவு நன்றாக நடிக்க எங்ஙனம் கற்றார்?” என்று முன்பு இவரால் இப் பாத்திரம் சரியாக ஆட முடியாது என்று