பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/708

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

693


இந்த இரண்டு நாடகங்களின் செலவு போக, இந்த கிளப் கட்டட பண்டுக்கு, நல்ல மொத்தம் மிகுதியாகும் என்று இந்தச் சபையின் காரியதரிசிகளில் ஒருவராகிய எஸ். வைத்தியநாத ஐயர் எனக்குத் தெரிவித்த பிறகுதான், என் மனம் பூரண உவகை பெற்றது. அதன் பேரில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரைத் துதித்துவிட்டு, அன்று இரவு (அல்லது காலை என்று சொல்ல வேண்டுமோ?) நான் உறங்கினேன்.

மறுநாள் சாயங்காலம் இந்தச் சபையின் கண்டக்டராகிய டி.வி.எஸ். தாதாச்சாரியார் பி.ஏ., பி.எல்., ஒரு ஈவனிங் பார்டி (Evening Party) கொடுத்தார். அதில் ஏதோ எங்களிருவர்களைப் பற்றி உபசார வார்த்தைகளாகச் சொன்னபோது, நான் பதிலுக்குச் சில வார்த்தைகள் சொல்ல வேண்டி வந்தது. அப்பொழுது நான் பேசிய சில வார்த்தைகள் என் ஞாபகத்திலிருக்கின்றன: “நான் எங்கள் சுகுண விலாச சபையின்றி வேறு சபையில் நடித்தது, அச் சபை ஸ்தாபிக்கப்பட்ட 1891ஆம் வருஷம் முதல், இதுதான் முதன்முறை. நான் இம்முறை மதுரைக்குப் புறப்பட்ட பொழுது, பட்டணத்து நண்பர்களை யெல்லாம் விட்டு அங்குப் போகிறோமே என்னும் மன வருத்தத்துடன் வந்தேன்; ஆயினும் இங்கு எனக்கு நீங்கள் செய்த உபசரணையினால், திரும்பி நான் போகும்பொழுது, நமது மதுரை நண்பர்களாகிய, உங்களைவிட்டுப் போகிறோமே என்னும் வருத்தத்துடன் போகிறேன்” என்று என் உள்ளத்தில் அச் சமயம் வாஸ்தவமாய்ப் பட்டதைத் தெரிவித்தேன், மறுநாள் இரவு ஒரு விருந்து நடந்தது. அச்சமயம் எனது மதுரை நண்பர்கள், மறுபடி நீங்கள் எப்பொழுது வந்து ஆக்ட்டு செய்வது என்று கேட்டார்கள்; எனக்கு ஞாபகம். இருக்கிறபடி, அச்சமயம் நான் எனது அத்யந்த நண்பருடன் கலந்து யோசனை செய்து, “இனிமேல் நாங்களிருவரும் அந்நியர்களாக உங்கள் சபையில் நடிப்பது நியாயமல்ல; எங்களிருவர்களையும் உங்கள் சபை அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று. சொன்னேன். உடனே, கொஞ்சமும் தாமதிக்காமல் இச் சபை காரியதரிசிகளிலொருவராகிய எஸ். வைத்தியநாத ஐயர் எங்களிருவருடைய கையொப்பங்களையும் அதன் பொருட்டு வாங்கிக் கொண்டார். இவரை இதற்கு முன்பே