பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/712

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

697


மனத்தைக் கவர்ந்தன. ஆகவே நான் ஒரு சிறிய நாடக ஆசிரியனானபிறகு, இந்தப் பாரத வீரனைப்பற்றி ஒரு நாடகம் எழுத வேண்டும் என்னும் அபேட்சை அதிகமிருந்தது. அந்த அபேட்சையை நிறைவேற்ற இத்தனைக் காலம் பிடித்தது. இந் நாடகத்தில் கர்ணனுடைய ஜீவிய சரித்திரத் தில் சில முக்கியமான அம்சங்களை விட்டுவிட்டதாக, எனது நண்பர்களில் சிலர் குறை கூறியுள்ளார். அவர்களுக்கு என் பதில் அடியில் வருமாறாம்: கர்ணன் மடிந்தவுடன் கர்ணனைக் கொன்றோமே என்று அர்ஜுனன் கர்வப்பட்ட தாகவும், அதை அடக்க ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தியானவர், “அர்ஜுனா, கர்ணனைக் கொன்றது நீ மாத்திரமல்ல; வேதியர் ஒருவர், பரசுராமர், தேவேந்திரன், குந்தி, சல்லியன், நான், நீ ஆகிய ஏழு பெயர்!” என்றனர் என்பதை; என் கதையின் அஸ்திவாரமாக எடுத்துக்கொண்டு, அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கர்ணனது தயாளத்துவமே அவனது மரணத்திற்கு உடந்தையாயிருந்தது என்பதை நிரூபிக்க - இந்தச் சந்தர்ப்பங்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு ஒரு நாடகமாக்கி எழுதினேன்; ஆகவே, மற்றும் சில விஷயங்கள் கர்ணனுடைய சரிதையில் குறிக்கத் தக்கனவாயினும், அவைகள் இந் நாடகத்தில் எழுதாது விடுத்தேன்.

இந் நாடகத்தை எங்கள் சபையார் நடித்தபொழுது, காலஞ் சென்ற கன்னையா. எங்களுக்குச் செய்த உதவியை, நான் எழுதாமல் விடுவது, செய்ந்நன்றி மறந்த குற்றத்திற்குள்ளாக்கும் என்னை; ஆகவே அதைப்பற்றி இங்கு எழுதுகிறேன்.

இச்சமயம் அவர் தன் “பகவத் கீதை” நாடகத்திற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்; அப்பொழுது, நான் கர்ணனைப் பற்றி எழுதிய இந் நாடகத்தைப் பற்றிக் கேள்விப்பட, அக் கதையின் விவரங்களைக் கேட்டறிந்து, தன்னால் இதற்கு என்ன உதவி செய்யக்கூடும் என்று கேட்டனுப்பினார். அப்பொழுது, எங்கள் சபையார் இந் நாடகத்திற்காக, கர்ணார்ஜுன யுத்தத்தின்போது உபயோகப்பட இரண்டு ரதங்கள் செய்ய வேண்டுமென்று தீர்மானித்து, அதற்காக ரூபாய் 200 எடுத்து வைத்திருந்தார்கள். இந்த இரண்டு ரதங்கள் உங்கள் மூலமாகச் செய்து கொடுக்க வேண்டுமென்று நாங்கள் கேட்க, இந்த இருநூறு