பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/713

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

698

நாடக மேடை நினைவுகள்


ரூபாயையும் வாங்கிக் கொண்டு, அதற்கு மேல் அதற்கு இருமடங்கு, தன் கையை விட்டுச் செலவழித்து எங்கள் சபைக்கு இரண்டு ரதங்களைச் செய்து கொடுத்தார். அவற்றுள் அர்ஜுனனது ரதமானது, கர்ணன் நாகாஸ்திரப் பிரயோகம் செய்யும்போது, தேர்த்தட்டு, ஸ்ரீ கிருஷ்ணன் சூழ்ச்சியினால் இறங்கும்படி, தந்திரமான விசையையுடையதாய்ச் செய்யப்பட்டது; இவையன்றி யுத்தத்திற்கு வேண்டிய அம்புகளும், நாகாஸ்திரமும் முதற் காட்சிக்கு வேண்டிய பசுவும் அதன் கன்றும் எல்லாம் செய்து கொடுத்தார். இவைகளெல்லாம் அன்றி, நான் கர்ணனாக அணிய வேண்டிய கவச குண்டலங்களை, பொன் கில்டு உடையதாய்ச் செய்து கொடுத்தார். அன்றியும் நாங்கள் இந் நாடகத்திற்குக் கடைசி ஒத்திகை செய்த பொழுது, அருகிலிருந்து, இவைகளை யெல்லாம் எப்படி உப யோகிக்க வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தார். இத் தகைய உதவி புரிந்த இத்தயாள குணமுடையவர்க்கு, எங்கள் சபையும் நானும் செய்யக்கூடிய கைம்மாறு என்னுளது? சாதாரணமாக ஆமெடூர் (amateur) சபைகளிலுள்ளவர்களே ஒருவருக்கொருவர் உதவிபுரிவதைக் காண்பது, கார்த்திகைப் பிறையைக் காண்பது போலாம்; நாடகமாடுவதைத் தன் ஜீவனோபாயமாகக் கொண்ட இவர், எங்கள் சபையின்மீது கொஞ்சமும் மாச்சரியமின்றி, இவ்வாறு உதவி செய்தது மிகவும் மெச்சத் தக்கதாம்.

இந் நாடகமாடிய இரண்டு முறையும், எனது அன்னையாக அதாவது குந்திதேவியாக, என் பழைய நண்பர் அ. கிருஷ்ணசாமி ஐயர் நடித்தார். என்னைப் போல் இவருக்கு வயது அதிகமாக ஆகியும் இவர் மிகவும் நன்றாய் நடித்துப் பாடினார் என்பது வந்திருந்தவர்கள் எல்லோருடைய அபிப்பிராயம். வயதானபடியால் பாடும் பொழுது கொஞ்சம் சிரமப்பட்டுப் பாடினாலும், குரலில் பழைய இனிமை இன்னும் போகவில்லை. “கடுகு இறந்தாலும் காரம் போகாதல்லவா?”

இக் “கொடையாளி கர்ணன்” என்னும் நாடகம், இரண்டு வருடங்களுக்கு முன் நான் அச்சிட்டதாயிருந்த போதிலும், இதர சபைகளால் பதினேழு பதினெட்டு முறை ஆடப்பட்டிருக்கிறது; இதில் ஒரு ஸ்திரீ பாத்திரம் இருக்கிற