பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/715

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

699


நாடக மேடை நினைவுகள் இதை மறுபடி ஆடாததற்குக் காரணம், நான் முன்பே இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்குத் தெரிவித்திருக்கிறேன். இதை இவ்வருஷம் எனது நண்பர் எஸ். சத்யமூர்த்தி ஐயர் ஆட் ஹாக் (ad hoc) கண்டக்டராயிருந்து நடத்தலாமா என்று என்னைக் கேட்டனர். “அதற்கு ஒரு ஆட்சேபணையு மில்லை; இதை இதர சபைகள் பன்முறை நடித்திருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் ஒரு கெடுதியும் சம்பவிக்கவில்லை; என்னை மாத்திரம் அதில் ஆடும்படி கேளாதீர்” என்று சொல்லி அதற்குக் காரணத்தையும் அவருக்குத் தெரிவித்தேன். அதன் பேரில் அவர் இந் நாடகத்தை எடுத்துக் கொண்டு ஆக்டர்களைத் தயார் செய்து ஆடி வைத்தார்.

1930ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் ஈஸ்டர் (Easter) விடுமுறையில், இரண்டாம் முறை நாங்களிருவரும் மதுரையில், மதுரை டிராமாடிக் கிளப் அங்கத்தினராக இரண்டு நாடகங்களை நடத்தினோம். இதற்குள்ளாக எனது அத்யந்த நண்பர் நாகரத்தினம் ஐயர் மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டார். ஆகவே நாங்களிருவரும் அங்குப் போக வேண்டியதாயிருந்தது; இதற்காகத்தான் அவருக்கு விடுமுறைக் காலமாகிய ஈஸ்டர் சமயத்தில் நாடகங்களை நடத்த வேண்டி வந்தது. என்னை நான்கு ஐந்து தினங்களுக்கு முன்பாக மதுரைக்கு வரும்படி எனது மதுரை நண்பர்கள் கேட்டுக் கொண்டபடி, முன்னதாகவே நான் போய் இங்கு நடத்த வேண்டிய “மனோஹரன்", “லீலாவதி சுலோசனா” இரண்டு நாடகங்களுக்கும் ஒத்திகை பார்த்து வந்தேன். முதல் நாடக தினத்திற்கு ஒரு நாள் முன்பாக எனது நண்பர் நாகரத்தினம் வந்து சேர்ந்தார். இந்த இரண்டு நாடகங்களும் மிகவும் விமரிசையாக நடத்தப்பட்டன என்பது என் அபிப்பிராயம். முதல் இரண்டு நாடகங்களைவிட, இவ்விரண்டு நாடகங்களுக்கு வசூல் அதிகமாயிருந்தது. இந்த இரண்டு நாடகங்களிலும் நான் இரண்டொரு சமாச்சாரங்கள் தவிர இங்குக் குறிக்கத்தக்க விஷயங்கள் ஒன்றும் அதிகமாயில்லை. நாகரத்தினம் ஐயர் விஜயாளாக நடித்தது மிகவும் கொண்டாடப்பட்டது. இரண்டாவது நாடகத்தில் எனது மதுரை நண்பர் மா. சுப்பிரமணிய ஐயர் அவ்வூர் பட்டிக்காட்டானைப் போல, சாரங்கன் பாத்திரத்தில் வேடம் புனைந்தது மிகவும்