பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/718

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

703


ஜனசமூக (Social) நாடகம். ஆகவே கதாநாயகன் தற்காலத்தில் மனிதனாய் இருக்க வேண்டி வந்தது; ஆகவே, அவனை பிராமணனோ, க்ஷத்திரியனோ, வைசியனோ, சூத்திரனோவாக ஆக்கவேண்டி வந்தது. சாதாரணமாக சூத்திர ஜாதியில் தான் மதுபானம் செய்யும் கொடிய பழக்கம் அதிகமாகயிருக்கிற தென்பதைக் கவனித்தவனாய், அவனை ஒரு சூத்திரனாக சிருஷ்டித்தேன். (மற்ற ஜாதியார் குடிப்பதில்லை என்று நான் சொல்ல வரவில்லை, எல்லா ஜாதியிலும் குடியர்களிருப்பதைப் பல வருங்களாக அறிந்துள்ளேன்; ஆயினும் சூத்திரர்களில்தான் இக் கெட்டபழக்கம் அதிகமாயுண்டு என்பது என் அனுபவத் தீர்மானம்) சூத்திரனாக்கிய பிறகு, அவனை முதலியாராக்குவதா? நாயுடுவாக்குவதா? பிள்ளையாக்குவதா? இன்னும் மற்றெந்தப் பிரிவினனாகச் செய்வது? என்னும் சங்கை பிறந்தது. எந்தப் பிரிவினனாக்கினாலும் அப் பிரிவினர் என்மீது குறை கூறுவார்கள். இந்தத் தர்ம சங்கடத்தினின்றும் தப்புவதற்கு மார்க்கமில்லை என்று யோசித்து கதாநாயகனை நாயுடுவாக்கினேன்; பலராம நாயுடு என்றும் பெயர் கொடுத்தேன். பலராமன் என்று பெயர் கொடுத்ததற்குக் காரணம், பாகவதத்தில் ஸ்ரீ கிருஷ்ணனுடைய தமயனாகிய பலராமர், மதுபானத்தில் மிகுந்த பிரீதியுள்ளவர் என்பதைக் கவனிக்கத்தக்கது. கதாநாயகனுடைய தம்பிக்கு கிருஷ்ணசாமி என்னும் பெயரையே கொடுத்துள்ளேன். அன்றியும் மற்ற வர்ணத்தாரும் பிரிவினரும் மனஸ்தாபமடையாதபடி, கதாநாயகனுடன் மதுபானம் செய்யும் நண்பர்களில், ஒருவனை ஐயராகவும், ஒருவனை முதலியாராகவும், ஒருவனைப் பிள்ளையாகவும் ஆக்கினேன். இவ்வளவு முயற்சியெடுத்துக் கொண்டும் நான் கோரிய எண்ணம் ஈடேறாமல் போயிற்று! நாடகம் எழுதி முடித்தவுடன், அச்சிடுவதற்கு முன்பாக, நான் ஒரு அங்கத்தினனாய்ச் சேர்ந்திருக்கும் ஹிந்து குட் டெம்பிளார்ஸ் லீக் (Hindu Good Templars’ League) என்னும் மதுவிலக்குச் சபையில், அதைப் படித்துக் காட்டினேன்; அதைக் கேட்ட நண்பர்களெல்லாம் மிகவும் நன்றாயிருக்கிற தென மெச்சினர். அவர்களுள் ஒருவர் மாத்திரம் (அவர் ஒரு நாயுடு என்பதை நான் இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு எடுத்துக் கூற வேண்டியது அவசியமில்லை), என்னை ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய், “எல்லாம்