பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/720

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

705


நமது நாடு முன்னுக்கு வர மார்க்கமில்லை என்பதை அந் நாடகத்தின் மூலமாக, தமிழ் உலகத்திற்குத் தெரிவிக்கலா மென்றிருக்கிறேன். எல்லாம் வல்ல ஈசன் அப் பிரயத்தனத்திற்குத் தன் இன் அருள் பாவிப்பாராக! (இதை எழுதியது பல வருடங்களுக்கு முன் என்பதை இதை வாசிப்பவர்கள் கவனிப்பார்களாக.)

இவ் வருஷம் செப்டம்பர் மாதம், எனது அத்யந்த நண்பர் கே. நாகரத்தினம் ஐயரும் நானும், மதுரை டிராமாடிக் கிளப்பார் வேண்டுகோளின்படி மறுபடியும் மதுரைக்குப் போய், “ஊர்வசியின் சாபம்", “வள்ளி மணம்” ஆகிய இரண்டு நாடகங்களையும் நடத்தினோம்.

இச் சமயம் மதுரையில் நாங்களிருவரும் ஆடியது மூன்றாம் முறையாகும். இங்கு “ஊர்வசியின் சாபம்” நடத்தியபொழுது நான் அனுபவித்த ஒரு வேடிக்கையான கஷ்டத்தை எழுத விரும்புகிறேன். இந் நாடகத்தைப் படித்தவர்கள், இதன் முதற் காட்சியில் அர்ஜுனன் மௌனமாய்த் தவஞ் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நன்கு அறிவார்கள். சாதாரணமாக இக்காட்சி இருபத்தைந்து அல்லது முப்பது நிமிஷம் பிடிக்கும்; அதுவரையில், இரு கைகளையும் தலைமேற் கூப்பிக்கொண்டு, விழித்த கண்ணினனாய், பஞ்சாக்கினி மத்தியில் தவமிருப்பதுபோல் இருந்து வழக்கப்பட்டிருக்கிறேன். இம்முறை இந்நாடகம் மதுரையில் நடிக்கப்பட்டபொழுது, சரியாக ஒன்றேகால் மணிநேரம் அங்ஙனம் அசையாமல் இருக்க வேண்டி வந்தது! ரம்பை, மேனகை, திலோத்தமை, ஊர்வசி ஆகிய அப்சர ஸ்திரீகள், தனியாகவும் ஒன்றாகவும் கூடி கானம் செய்தது மன்றி, ரம்பை வேஷம் பூண்ட எனது மதுரை நண்பர் கணபதி சுப்ரமணிய ஐயர், நர்த்தனம் வேறு செய்தார். இதெல்லாம் பார்ப்பதற்கும் கேட்பதற்கும், சபையோர்க்கு சந்தோஷத்தைத் தந்தபோதிலும், அர்ஜுன வேஷதாரியாகிய எனக்கு, சிரமத்தைத் தந்தது; இந்த ஒன்றேகால் மணி நேரம் கைகளை உயர்த்தி அஞ்சலி ஹஸ்தனாய் இருந்தபடியால், காட்சியின் முடிவில் என் கை விரல்கள் விரைத்துப் போயின! அவைகளை என், நண்பர் ஒருவரைக் கொண்டு உருவச் செய்த பிறகே என் சுவா தீனத்திற்கு வந்தன! ஆயினும் இக் கஷ்டத்தை அறிந்த