பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/723

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

708

நாடக மேடை நினைவுகள்


இவ்வருடத்தின் கடைசியில் கிறிஸ்ட்மஸ் (Christmas) விடுமுறையில் எனது நண்பர் நாகரத்தினம் ஐயர் சேலத்திலிருந்து சென்னைக்கு வர, நாங்களிருவரும் இரண்டு மூன்று நாடகங்களில் இங்கு நடித்தோம்.

இவ் வருஷத்திய நிகழ்ச்சிகளில் இன்னும் ஒன்றைத் தான் குறிக்க வேண்டியிருக்கிறது. எங்கள் சபையின் வழக்கப்படி ஏப்ரல் மாதம் ஷேக்ஸ்பியர் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கொண்டாட்ட தினம் சாயங்காலம் ஆரம்பத்திற்கு ஐந்து நிமிஷம் முன்னாகத் தான், அன்று ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவியைப்பற்றி உபன்யாசம் செய்ய இசைந்தவர், தான் அவ்விதம் செய்ய ஏதோ காரணத்தினால் முடியாமையை எங்களுக்குச் சொல்லியனுப்பினார். “செல்லுஞ் செல்லாததற்குச் செட்டியாரைப் பிடி” என்பது போல், எனது பால்ய நண்பர் வி.வி.ஸ்ரீனிவாச ஐயங்கார் அந்த உபன்யாசம் செய்வதற்கு என்னைப் பிடித்தார். நான் சபையின் பெயர் கெடாதபடி அதற்கிசைந்து, ஷேக்ஸ்பியர் நடனாக நடித்ததைப்பற்றி, ஒரு சிறு உபன்யாசம் செய்ய வேண்டி வந்தது. சமயம் வந்தபொழுது சபைக்குக் கைகொடுக்க வேண்டிவனாய் இன்னும் வாழ்ந்து வருகிறேன், இறைவன் அருளால்.


32 ஆவது அத்தியாயம்

னி 1931ஆம் வருஷத்திய நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறேன்.

இவ் வருஷம் அக்டோபர் மாதம் நான் மதுரைக்குப் போயிருந்தேன்; எனது அத்யந்த நண்பர் கே. நாகரத்தினம் ஐயர், சேலத்திலிருந்து அங்கு வந்து சேர்ந்தார். அக்டோபர் மாதம் 3ஆம் தேதியிலும் 5ஆம் தேதியிலும் இரண்டு நண்பர்கள்", “சுபத்திரார்ஜுனா” என்னும் இரண்டு நாடகங்களிலும் நாங்கள் நடித்தோம். மதுரை டிராமாடிக் கிளப்பில் நாங்களிருவரும் நடித்தது இது நான்காம் முறையாகும். இரண்டு நண்பர்கள் நாடகத்தில் சற்றேறக்