பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/724

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

709


குறைய இரண்டு வருடங்களுக்கு முன் ஆடிய ஆக்டர்களே நடித்தோம்; ஆயினும் இம்முறை நான் சுந்தராதித்யனாக நடித்தது எனக்குத் திருப்திகரமாயில்லை ; இதற்கு முக்கியக் காரணம், எனது உடம்பில் ஒருவித சிரங்கும் கட்டியும் கண்டு அவற்றால் நான் பீடிக்கப்பட்டிருந்ததேயென நம்புகிறேன். வருகிறேன் என்று ஒப்புக்கொண்டபின், வராமற் போவது தவறென எண்ணி, நான் மதுரைக்குப் போய் நடித்தேனே யொழிய, என் தேக சௌகர்யத்தை மாத்திரம் கருதியிருப்பேனாயின், நான் போயிருக்க மாட்டேன். தினம் எனது நண்பர் டாக்டர் சீதாராம ஐயரிடம் போய் என் கட்டிகளுக்கெல்லாம் சிகிச்சை செய்து கொண்டு, பிறகே இவ்விரண்டு நாடகங்களிலும் நடிக்க வேண்டிய வனாயிருந்தேன். எப்படியாவது வாக்குத் தவறாதபடி இவ்விரண்டு நாடகங்களிலும் நடித்தாக வேண்டும் என்பதே என் பெருங்கவலையாயிருந்தது. இந்த ஸ்திதியில், மிகவும் கஷ்ட பாகமான சுந்தராதித்யன் பாத்திரத்தில் நான் நன்றாய் நடிக்காதது ஓர் ஆச்சரியமன்று. தேக சிரமம் அதிகமில்லாமல் நடிக்கக்கூடிய அர்ஜுனன் பாத்திரத்தை, ஏறக்குறைய திருப்திகரமாகவே நடித்து முடித்தேன். இதனால் இதை வாசிக்கும் எனது நண்பர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்பும் விஷயமென்னவென்றால், நாடக மேடையில் பெயர் பெற விரும்பும் இளைய ஆக்டர்கள், கூடுமானவரை நல்ல தேக ஸ்திதியிலிருக்கும்போதுதான் நடிக்க வேண்டு மென்பதே; நாடகமாடுவதையே ஜீவனோபாயமாக உடையவர்களைவிட, ஆமெடூர் (Amateur) ஆக்டர்களாகிய நாம், இந்த சௌகர்யமுடையவர்களாயிருக்கிறோம் அவர்கள் தங்கள் பிழைப்பின் பொருட்டு, தேகம் என்ன அசௌக்கியமாயிருந்தபோதிலும் ஆக்டு செய்ய வேண்டியவர்களாயிருக்கிறார்கள். நமக்கு அந்தக் கட்டாயம் கிடையாது; ஆகவே, முக்கியமான பாத்திரங்களை - அதிலும் கஷ்டமான பாத்திரங்களை - நல்ல தேக ஸ்திதியிலிருக்கும்போதுதான் நாம் நடிக்க வேண்டும்.

இம் முறை நடித்த சுபத்திரார்ஜுனா நாடகமானது சபையோரால் மிகவும் சிலாகிக்கப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணனாக நடித்த எனது மதுரை நண்பர் பஞ்சநாத ஐயர், மிகவும் விமரிசையாக நடித்தார்; இப் பாகத்தில் இவருக்கு