பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/730

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

715


இவ் வருஷத்தின் கடைசியில் டிசம்பர் மாதத்திய நாடகங்களில், எனது அத்யந்த நண்பராகிய நாகரத்தினம் ஐயரும் நானும் “வள்ளி மணம்” என்னும் நாடகத்தில் முக்கியப் பாகங்களை எடுத்துக் கொண்டு நடித்தோம்.

33ஆவது அத்தியாயம்

னி 1932ஆம் வருஷத்திய நிகழ்ச்சி பற்றி எழுதுகிறேன். இவ் வருஷ ஆரம்பத்தில் ஜனவரி மாதம் இரண்டாம் தேதி எங்கள் சபையார் “அமலாதித்யன்” (Hamlet) நாடகத்தை ஆட வேண்டுமென்று தீர்மானித்தனர். இதற்கு முக்கியக் காரணம் எனது நண்பராகிய திவான் பஹதூர் ஜெ. வெங்கடநாராயண நாயுடுகாருவின் தூண்டுதலேயாம். இது நடிப்பதற்கு மிகவும் கஷ்டமான நாடகம் என்பதை முன்பே தெரிவித்திருக்கிறேன். எனக்கு வயது மேலிட்டபடியால் இனி இப்படிப்பட்ட கஷ்டமான நாடகங்களில் நடிப்பதில்லையென்று தீர்மானித்திருந்தேன். ஆயினும் எனது நண்பரும் சபையின் காரியங்களில் இன்னும் மிகவும் ஊக்கமுடன் உழைத்து வரும் நாயுடுகாரு வேண்டுகோளை மறுக்கலாகாது என்று இசைந்தேன்.

ஆயினும் இந் நாடத்தில் முன்பு போல் நடிக்க முடியுமோ என்னவோ என்னும் சந்தேகம் மாத்திரம் என்னை விட்டகலவில்லை. நாடக ஆரம்பத்திற்கு முன் எனக்கு அருகிலிருந்து வர்ணம் தீட்டி வைத்த எனது பழைய நண்பராகிய தாமோதர முதலியாரிடம், “நீங்கள் அருகிலிருந்து இந் நாடகத்தைப் பார்த்து, “கடுகு இறந்து போனாலும், காரமாவது கொஞ்மிருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன். அவர் மறுநாள் என்னைப் பார்த்து, “கடுகு இன்னும் சாகவேயில்லை!” என்று பதில் உரைத்தார்.

இவ் வருஷம் மார்ச்சு மாதம் 14ஆம் தேதி எங்கள் சபையின் இங்கிலீஷ் கண்டக்டர், ஷேக்ஸ்பியர் மஹா நாடகக் கவியின் “ஜூலியஸ் சீசர்” என்னும் நாடகத்தை