பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/733

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

718

நாடக மேடை நினைவுகள்


இவ்வண்ணமே மித்ராவசு என்றாகிறது; வசிஷ்டர், சிஷ்ட வாசியாகிறார்; மற்றப் பெயர்களுமிப்படியே. இதனால் ஹரிச்சந்திரன் கதையை ஹேளனம் செய்தபடியன்று; அக் கதையானது நமது இந்திய தேசத்திற்கே அள்ளக் குறையாத ஒரு பெறும் நிதியாம்; “பர்லெஸ்க்” என்கிற நாடகப் பிரிவின் படி இதை இவ்வாறு எழுதியதேயொழிய வேறன்று.

இந் நாடகத்தை எழுதுவதில் நான் அதிக சிரமப்பட்டேன். இதை எனது நண்பர்கள் வாசித்துப் பார்ப்பார்களாயின், அக் கஷ்டம் அவர்களுக்குப் புலப்படும். இந் நாடகம் மற்றவர்களால் இதுவரை இரண்டொரு முறை ஆடப்பட்ட போதிலும், எங்கள் சபையாரால் இதுவரையில் ஆடப்படவில்லை.

“காளப்பன் கள்ளத்தனம்” என்னும் மற்றொரு நாடகம், 1931ஆம் வருஷம் எழுதி அச்சிடப்பட்டது என்றால், அவ் வருஷம் நான் மங்களூருக்குப் போயிருந்த பொழுது, அங்கே ஆங்கிலத்தில் ஒரு சபையார் இக் கதையை நடித்ததைக் கண்டேன். இதைத் தமிழில் எழுதினால் மிகவும் நன்றாயிருக்குமென என் மனத்திற்பட, சென்னைக்கு வந்தவுடன், அக் கதையைத் தமிழில் மொழி பெயர்த்து நாடகமாக எழுதினேன். இதன் மூல நாடகம், மாலியர் என்னும் பிரான்சு தேசத்து நாடகக் கவியால் பிரெஞ்சு பாஷையில் எழுதப்பட்டது. இங்கிலாந்து தேசத்தில் எப்படி ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி கொண்டாடப்படுகிறாரோ, அப்படியே பிரான்சு தேசத்தில் மாலியர் கொண்டாடப்படுகிறார். இவர் எழுதியுள்ள பல (Farces) பிரஹசனங்கள் லோகப் பிரசித்தி பெற்றவை. இவரது பிரஹசனங்களை ஆடப் பார்க்கும் பொழுதுதான் அவைகளின் சுவை நன்றாய் நமது மனத்தில் உதிக்கும்; படிக்கும்பொழுது அதன் ருசி முற்றிலும் விளங்குவதில்லை; என் அனுபவமும் அபிப்பிராயமும் அப்படியே. இந் நாடகமாவது இதுவரையில் நானறிந்த வரையில் ஒருவராலும் ஆடப்படவில்லை.

இவ் வருஷம் ஈஸ்டர் (Easter) விடுமுறையில் எனது அத்யந்த நண்பர் நாகரத்தினம் ஐயரும் நானும் மறுபடியும் மதுரை டிராமாடிக் கிளப்பாரால், மதுரைக்கு வரவழைக்கப்