பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/734

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

719


பட்டோம். அங்கு “சத்ருஜித்", “லீலாவதி-சுலோசனா” என்னும் இரண்டு நாடகங்களில் இருவரும் முக்கியப் பாகங்களை எடுத்துக்கொண்டு நடித்தோம். முதலிற்கண்ட “சத்ருஜித்” நாடகம் நான் இதற்கு முன் 34 வருடங்களுக்கு முன் சென்னையில் ஆடியது. யாது காரணத்தினாலோ எனதாருயிர் நண்பர் ரங்கவடிவேலு அதில் ஆட மறுபடியும் இச்சை கொள்ளவில்லை. அக் காரணம் பற்றி அந் நாடகத்தை மறுபடியும் ஆடும்படி எங்கள் சபையில் நான் பிரேரேபிக்கவில்லை. மதுரை டிராமாடிக் கிளப்பார், இதை ஆட வேண்டுமென்று தீர்மானித்தபொழுது, இதை ஒரு புதிய நாடகமாகப் பாவித்து நான் கற்க வேண்டியவனா யினேன். முப்பத்து நான்கு வருடங்களுக்கு முன் இதில் நடித்தது எனக்குக் கொஞ்சமும் ஞாபகமில்லாமற் போயிற்று. நான் சிரமப்பட்டு சத்ருஜித் பாத்திரத்தைக் கற்க வேண்டி வந்ததன்றி, இதற்காகச் சேலத்துக்குப் போய் எனது அத்யந்த நண்பர் நாகரத்தினம் ஐயருக்கு, “சதீமணி” பாத்திரத்தைக் கற்பிக்க வேண்டி வந்தது. இந்த நாடகம் ஒரு பெரிய நாடகம். அன்றியும் நடிப்பதும் கஷ்டம். ஆகவே, நாடக தினத்திற்குப் பதினைந்து தினத்திற்கு முன்பாக மதுரைக்குப் போய், ஒத்திகைகள் நடத்த வேண்டி வந்தது. ஆயினும் நான் எடுத்துக்கொண்ட சிரமத்திற்குப் பரிகாரமாக எனது மதுரை நண்பர்கள் மிகவும் நன்றாய் நடித்து, கிளப்புக்குப் பெயரும், எனக்கு மகிழ்ச்சியும் கொடுத்தனர். முக்கியமாக எனது நண்பர் மா. சுப்பிரமணிய ஐயர் கஜவதனனாக; மிகவும் நன்றாய் நடித்தார். அன்றியும் விலாசினி வேடம் பூண்ட மதுரை அட்வகேட்டும், டிராமாடிக் கிளப்பில் ஓர் அங்கத்தினருமாகிய, நாராயணசாமி சாஸ்திரியார் பி.ஏ., பி.எல்., அவர்களின் மைத்துனியாகிய, சுமார் ஒன்பது வயதுடைய ஒரு சிறு பெண் மிகவும் நன்றாய் நடித்து, சபையோரை மகிழச் செய்தது; இச் சிறு பெண் சில இடங்களில் நடித்தது, தேர்ந்த பெரிய ஆக்டர்களும் அவ்வளவு அழகாய் நடித்திருக்க மாட்டார்கள் என்று என்னை நினைக்கச் செய்தது; இவ்வளவு புத்தி சாதுர்யமான பெண் இன்னும் இரண்டொரு வருடத்தில் பெரியவளாகிக் கலியாணமாகி, நாடக மேடையை வெளியிலிருந்துதானே பார்க்க வேண்டும் என்று, நாடகம் முடிந்ததும் வியசனப்பட்டேன். இக்குழந்தைக்கு மீனாட்சி