பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/737

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

722

நாடக மேடை நினைவுகள்


அழகு வாய்ந்தவராயினும், ஸ்திரீ வேஷம் பூண எவ்வளவு பொருத்தமுள்ளவர்களாயிருந்தபோதிலும், ஸ்திரீ வேடம் புனைவது தகுதியல்ல என்று எண்ணுகிறார்கள். அவ்வாறு அவர்கள் எண்ணுவது அவ்வளவு உசிதமல்ல வென்பது என் கொள்கை. கள்ளனைப்போல் ஓர் உயர் குலத்தான் வேஷம் பூண்டு நடிக்கிறான் என்றால், எல்லோரும் பாக்கப் போகிறார்கள், சந்தோஷமடைகிறார்கள்; இதைவிட்டு ஒரு கள்ளனையே அப்பாத்திரமாக நடிக்கச் செய்தால் மேலாகுமோ? எனது நண்பர் பி.வி. ராமானுஜ செட்டியார், பிரதாபருத்ரீயம் என்னும் நாடகத்தில் அசல் வண்ணானைப் போல் நடிக்கிறது எல்லோராலும் புகழப்படுகிறது; அதைவிட்டு வாஸ்தவமான வண்ணானையே அப்பாத்திரத்தை நடிக்கும்படி செய்தால் என்ன பெருமையாகும்? அம்மாதிரியாக அசல் ஒரு பெண்மணியைப்போல் ஓர் ஆடவன் வேடம் பூண்டு நடிப்பதும் சிலாகிக்கத் தக்கதாம் என்பது என் கொள்கை. வேடம் தரித்து நடிக்க வேண்டிய நாடகக் கலையில், ஆடவன் ஸ்திரீ வேஷம் பூணுவது மெச்சத்தக்கதாம் என்பது என் அபிப்பிராயம்.


34ஆவது அத்தியாயம்


னி 1933ஆம் வருஷம் முதல் 1937ஆம் வருஷம் முடிவு வரையில் நடந்தேறிய விஷயங்களைப் பற்றிக் கூறி இவ்வத்தியாயத்தையும் இந் நாடக மேடை நினைவு களையும் முடிக்கிறேன். கடந்த ஐந்து வருடத்திய சங்கதி களைப்பற்றி எழுதும்பொழுது, எனக்குண்டான ஒரு கஷ்டத்தை இங்கு எழுதுகிறேன். “கடலைக் கடக்கக் கஷ்டப்படவில்லையாம், ஒரு சிறு வாய்க்காலைத் தாண்ட கஷ்டப்பட்டானாம்” என்னும் பழமொழிக்கு இசைந்தபடி, சென்ற நாற்பத்திரண்டு வருடங்களுக்குமுன் நடந்த சமாச்சாரங்களெல்லாம் என் நினைவிற்குச் சுலபமாய் வந்தன. இப்பொழுது, கடந்த ஐந்து வருடங்களில் நடந்த சமாச்சாரங்களெல்லாம் என் நினைவிற்குச் சுலபமாக