பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/738

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

723


வரவில்லை ! அவைகளைக் குறிப்பிடப் பல காகிதங்களைப் பரிசோதித்து எழுதவேண்டியதாயிருந்தது! இதற்கு முக்கியக் காரணம், எனக்கு வயது மேலிட்டு ஞாபக சக்தி குறைந்ததேயாம் போலும். தன் முதுமையில் “மறதி என்னும் கள்ளன் கொள்ளை கொண்டனன்” என்று ஒரு தமிழ்ப் புலவர் கூறியது எனக்கு இத் தருணம் ஞாபகத்திற்கு வருகிறது.

1933ஆம் வருஷத்தின் ஆரம்பத்தில், இதுவரையில் எங்கள் சபையில் புகாத ஒரு கெட்ட விஷயம் புகுந்தது; அதாவது பிராமணர் சூத்திரர் என்னும் கட்சியே. இக் கெடுதி புகுந்ததற்குக் காரணம் இருவர். பிராமணர் சூத்திரர் என்னும் கட்சியைப்பற்றிப் பேசவும் கூடாது என்னும் கோட்பாடு உடைய நான், இதைப்பற்றி விவரித்து எழுதுவது நியாமல்ல. இக்கட்சி உண்டானதால் எங்கள் சபை, வர வர, க்ஷண திசையை அடைந்து வந்ததென்பதற்கு யாதொரு சந்தேகமு மில்லை. சென்ற இரண்டு வருடங்களாகத்தான் சபையின் உடலைவிட்டு இவ்விஷம் கொஞ்சம் கொஞ்சமாக அகன்று கொண்டிருக்கிறதென்று எண்ணுகிறேன்; முற்றிலும் இது இடம் தெரியாது அகன்றாலொழிய எங்கள் சபை முன்பிருந்த ஸ்திதிக்கு வராதென்பது என் நிர்ணயமான அபிப்பிராயம்.

இக் காரணம் பற்றி இவ் வருஷம் சபையில் பொதுக் கூட்டம் கூடியபொழுது, நான் சபையின் நிர்வாக சபையில் ஒரு மெம்பராக நிற்கமாட்டேன் என்று மறுத்தேன். சுகுண விலாச சபை ஆரம்பமானது முதல் இதுவரையில் இவ் வருஷம்தான் நிர்வாக சபையில் அங்கத்தினனாக நான் இராமற்போனது.

நிர்வாக சபையில் அங்கத்தினனாக நிற்காமற் போன போதிலும், இவ் வருஷம் என்னை எந்த நாடகத்தில் ஆடும்படி கேட்டபோதிலும் நடித்து வந்தேன். இவ் வருஷம் நடத்திய நாடகங்களில் குறிக்கத்தக்கது, எனது பால்ய நண்பர் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எழுதிய ‘கீதோதயம்’ என்னும் ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய பால்ய லீலைகளைப்பற்றிய நாடகம் ஒன்றே. அதில் அவர் வேண்டுகோளுக்கிணங்கி, ஒரு சிறு பாகமாகிய