பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/739

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

724

நாடக மேடை நினைவுகள்


“ஜோஸ்யர்” பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நடித்தேன். இந் நாடகம் நடித்த பொழுது அதைப்பற்றி விமரிசனம் எழுதிய ஒரு பத்திராதிபர், முக்கியப் பாத்திரங்களையெல்லாம் விட்டு விட்டு, நான் நடித்த சிறு பாகத்தை மிகவும் சிலாகித்துக் கூறினர். இதை என் புகழ்ச்சியாக இங்கு நான் எழுதவில்லை ; எவ்வளவு சிறிய பாகமாயிருந்தாலும், அதைத் தக்கபடி நடித்தால் எப்படியும் பெயர் எடுக்கலாம் என்பதை, இதை வாசிக்கும் எனது இளைய நண்பர்கள் அறியும் பொருட்டே எழுதியுள்ளேன்.

இக் கீதோதயம் நாடகசிரியராகிய எனது நண்பரால் எனக்கு “அர்ப்பணம்” (Dedication) செய்யப்பட்டது. இதுவரையிலும், இதற்குப் பின்னும், பல நாடகாசிரியர்கள் தங்கள் நாடகங்களை எனக்கு அர்ப்பணம் செய்திருக் கிறார்கள். இருந்தபோதிலும், வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எனக்குத் தான் எழுதிய இந் நாடகத்தை அர்ப்பணம் செய்ததையே நான் மிகவும் சிலாகிக்கின்றேன். இதை இங்குக் குறிப்பிடுவது தவிர அவருக்கு நான் வேறு கைம்மாறு செய்ய அசக்தனாயிருக்கிறேன்.


பயன் நூக்கார்ச் செய்தஉதவி நயந்தூக்கின்
நன்மை கடலினும் பெரிது.”

இவ் வருஷம் எங்கள் சபை ஆயிரத்தாவது நாடகம் நடத்தியது. ஆயினும் அதைக் கவனிப்பாரில்லாதபடி அந்த ஸ்திதிக்கு எங்கள் சபையை, பிராமணன், சூத்திரன் என்னும் பிரிவை சபைக்குட்புகச் செய்தவர்கள், கொண்டு வந்து விட்டனர். சில வருடங்களுக்கு முன் அமெரிக்க தேசத்தில் ஒரு ஆமெடூர் (Amateur) நாடக சபை அறுபதாவது நாடகம் நடத்தினதைப்பற்றி ஒரு மாதப் பத்திரிகையில் மிகவும் கொண்டாடப்பட்டது. எங்கள் சபை ஆயிரம் நாடகம் ஆடி முடித்தபோதிலும் அதைக் கவனிப்பாரில்லாமற் போயிற்று! இதனாலாவது பிராமணர் சூத்திரர் என்னும் கட்சிப் பிரிவின் கெடுதியை அனைவரும் அறிந்து, இக் கெடுதியிலும் கெடுதியை சபையைவிட்டு முற்றிலும் அகற்றுவார்களாக! அன்றியும் இக் கெடுதி நமது தேசத்தை விட்டு அகல வேண்டுமென்பது ஈசனுக்கு என் பிரார்த்தனை! இதைப்பற்றி என் அபிப்பிராயத்தை இன்னும் அதிகமாக