பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/744

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

729


 இல்லாது வெளியூர்களில் இவைகள் எத்தனை முறை ஆடப்பட்டனவோ, அது ஈசன் திருவுள்ளத்திற்குத்தான் வெளிச்சம்!

1930ஆம் வருஷம் எனது நண்பராகிய சுதேசமித்திரன் பத்திராதிபர், எனது நாடக மேடை நினைவுகளைத் தன் பத்திரிகைக்கு எழுதியனுப்பும்படி கேட்க, அதற்கிசைந்து அவ்வருடம் ஜூன் மாதம் முதல், வாரம் தோறும் சில வருடங்களாக எழுதி வந்தேன். மூன்று நான்கு வருடங்கள் அவைகளை யெல்லாம் ஐந்து பாகங்களாக அச்சிட்டுள்ளேன். கடைசியாக நாளது வரையிலுள்ள நாடக மேடை நினைவுகளை இந்த ஆறாம் பாகமாக அச்சிட்டிருக்கிறேன்.

1930இல் இதை எழுத ஆரம்பித்தபொழுது, இவற்றை யெல்லாம் எழுதி முடிக்க ஈசன் எனக்கு ஆயுள் அருள்வாராக என்று பிரார்த்தித்து ஆரம்பம் செய்தேன். அப் பிரார்த்தனைக்கிசைந்து, எனக்கு ஆயுளையும், வேண்டிய ஊக்கத்தையும் தேக பலத்தையும் கொடுத்த, எல்லாம் வல்ல ஈசன் கருணையைப் போற்றி, இத்துடன் என் நாடக மேடை நினைவுகளை முடிக்கிறேன்.


ஆறாம் பாகம் முற்றிற்று


நாடக மேடை நினைவுகள் முற்றிற்று