பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராவ் பஹதூர் ப. சம்பந்த முதலியார்

69


கேட்டபொழுது ஒரு குற்றத்தையும் எடுத்துக் காட்ட அவரால் முடியாமற் போன போதிலும், “நீ பேசிய மாதிரி தப்பிதம்” என்று கூறினார். இப்பொழுது இதைப்பற்றி நான் சாவகாசமாய் யோசித்துப் பார்க்குமிடத்து செட்டியார் கூறியது வாஸ்தவம் என்று எனக்குத் தோன்றுகிறது. அக்காலத்தில் என்னிடமிருந்த பல துர்க்குணங்களில் இது ஒன்றாம். ஏதாவது ஒரு விஷயத்தைப்பற்றி நான் கொண்ட அபிப்பிராயங்கள் மிகவும் சரியானவையாயிருந்த போதிலும், அவற்றை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறும் விஷயத்தில் சாந்தமாய் அவைகளைக் கூறி மற்றவர்களை என் வசம் திருப்பும்படியான சக்தியே என்னிடம் அக்காலம் இல்லை. இது பெரிய தவறு என்பதை அப்பொழுது அறிந்திலன்; பட்ட பின்தான் புத்தி வரும் என்பதற்கிசைய, இதனால் பல துயரங்கள் அனுபவித்த பிறகுதான் இந்தப் புத்தி எனக்கு வந்தது. இதைப்பற்றி என் தந்தையும் பல தடவைகளில் எனக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார். “சம்பந்தம் சொல்லுவது சரிதான், ஆயினும் அதையேன் அவ்வளவு முரட்டுதனமாய்ச் சொல்கிறான்?” என்று எனது தமயனிடம் அவர் ஒரு முறை கூறியது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது.

இதே முதலியார் அவர்கள், அக்காலம் எங்கள் வேண்டு கோளுக்கிசையா விட்டாலும், பிறகு 1895ஆம் வருஷம் நாங்கள் “மனோஹரன்” என்னும் நாடகத்தை முதல் முறை விக்டோரியா ஹாலில் ஆடியபொழுது, அதைப் பார்க்க வந்து, ஆரம்பம் முதல் நாடக முடிவுவரையில் ஏறக்குறைய ஐந்து மணி நேரம் அதைப் பார்த்து, பிறகு மறுநாள் தான் கண்டதை மிகவும் புகழ்ந்து, அந்நாடகத்தைப் பற்றி ஐந்து பக்கங்களுக்குமேல் சிறப்பாக எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அக்கடிதம் இன்னும் என்னிடம் இருக்கிறது. நாடகமே கூடாதென்று பழித்தவர் மனத்தைத் தெய்வா தீனத்தால் அவ்வளவு திருப்பினோமே என்று சந்தோஷப் பட்டு, அக்கடிதத்தை மிகவும் அருமையாகப் பாதுகாத்து வருகிறேன். அதற்கப்புறம் பல தடவைகளில் எனது நாடகங் களைப் பார்த்து முதலியார் அவர்கள் சந்தோஷித்திருக்கிறார். முதலில் இதை வெறுத்ததற்காக இவர் மீது நான் குற்றங் கூறவில்லை. சென்னையில் அநேகம் கற்றறிந்த பெரிய மனிதர்கள் மனமும் இவருடையது போல்தானிருந்தது. சுகுண