பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

நாடக மேடை நினைவுகள்


விட்டோம். உடனே எங்கள் கண்டக்டராயிருந்த திருமலைப் பிள்ளை வந்து எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று விசாரித்து விட்டு என் கையிலிருந்து சீனிக் அரேன்ஜ்மென்ட்ஸ் காகிதம்அதாவது இன்னின்ன காட்சியில் இன்னின்ன படுதா விடவேண்டும், மேடையின் பேரில் இன்னின்ன நாற்காலிகள், படுக்கைகள் முதலியன வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட காகிதத்தை வாங்கிக்கொண்டார். இவர் எங்கள் ஒத்திகைதோறும் வந்திருந்து எங்களுக்குச் சொல்லிக்கொடுத்ததன்றி நாடகத் தினங்களில் செய்த உதவியைப்பற்றி எனது சிறிய நண்பர் அறிய வேண்டியது அதி அவசியம். நாடக தினத்திற்கு இரண்டு மூன்று நாள் முன்பே மேற்சொன்ன ஜாபிதாவை நான் தயார் செய்துவிடுவேன். நாடக தினம் பகல் வந்து, ஒவ்வொரு காட்சிக்கும் படுதா முதலியன விட்டு, வைக்க வேண்டிய சாமான்களை வைக்க வேண்டிய இடங்களில் வைத்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வார். ஏதாவது ஒன்று குறைவாயிருந்தாலும் விடமாட்டார்; இராத்திரிக்கு வைத்துக் கொள்ளுவோம் என்று யாராவது சொன்னால், ஒரே பிடிவாதமாக அது உதவாது என்று கூறி அதைக் கொண்டுவரச் சொல்லி வைத்துப் பார்த்த பிறகுதான் திருப்தி அடைவார். சுருக்கிச் சொல்லுமிடத்து நாடகத்தில் வசனத்திற்கும் பாட்டிற்கும் ஒத்திகை போட்டுப் பார்ப்பது போல, காட்சிகளுக்கும் ஒத்திகை போட்டுப் பார்ப்பார். அவர் கற்பித்த இந்த வழக்கத்தைப் பிற்காலம் எனது நண்பனாகிய ரங்கவடிவேலு முதலியார் அனுசரித்து வந்தார். எனது தௌர்பாக்கியத்தால் சில வருஷங்களுக்கு முன் நான் அவரை இழந்த பிறகு புதிய நாடகங்கள் ஏதாவது போடும்போதெல்லாம் நானும் அனுசரித்து வருகிறேன்.

பிறகு நாடகம் நடக்கும்பொழுது ஒரு பக்கமாய் நின்று ஒவ்வொரு காட்சி ஆனவுடன் பிறகு வரவேண்டிய காட்சிக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்துவருவார். தன்மேற்சட்டையை கழற்றி விட்டு, ஷர்ட்டின் கைளைத் திருப்பிவிட்டு, வேலைக்காரர்களுடன் வேலைக்காரனாய், பூந் தொட்டிகளை எடுத்து வைப்பது முதலிய வேலைகளையும் தளராமல் செய்துவருவார். மேலே திரைகளாவது திரைக் கயிறுகளாவது ஏதாவது சிக்கி கொண்டால், உடனே, ஏணியின்மீது ஏறி பரணுக்குப்போய் அதைச் சரிப்படுத்துவார். தற்காலத்தில்