பக்கம்:நாடும் ஏடும்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோபுர உச்சியி லிருந்து குப்பை மேட்டுக்கு வரத் தயாராக இருக்க வேண்டும். கற்றோரும் மற்றோரும் பண்டிதரும் பாமரரும் பணக்காரனும் ஏழையும் படித்துணரும் பாங்கிலே, எளிய நடையிலே இயல்பான இயற்கைக் கருத்துக் கூறும் கருத்தைக் கவின்பெறச் செய்யும் கருத்துக்கள் நிரம்பியும் அமைய வேண்டும். ஆனால் நம் நாட்டு இலக்கிய கர்த்தாக்கள் செய்துள்ள இலக்கிய சேவை இதற்கு நேர்மாறானது. அதனைப் பண்டிதரும் பகுத்தறிய முடியாத பண்புடனே சமைத்துள்ளனர், சிற்றறிவினர் சிந்தனையில் சிந்திக்கவும் கூடாத சிறப்புற்று விளங்குகின்றன இந்நாட்டு ஏடுகள்.

இன்றைய இலக்கியங்களிலே சிலவற்றிற்கு மூலத்தைவிட அவற்றின் விரிவுரைகளும், விருத்தியுரைகளும் பன்மடங்கு கடினமாகத் திகழ்கின்றன. மற்றும் இக்காலப் பண்டிதர்கள் தம் காலத்தை ”இந்த உரை நல்லது" அல்லது "அந்த உரை நல்லது” இது இன்னாரால் கொள்ளப்படுவதால் சிறப்புடைத்து; அது அன்னோரால் கொள்ளப் பட்டமையால் ஒவ்வாதது என இத்தகைய போராட்டங்களிலே கழிக்கின்றனர் சிறிதும் நாட்டைப்பற்றிய நாட்டமின்றி கடமை பற்றிய கருத்தின்றி. மற்றும் இத்தமிழ்ப் பண்டிதர்கள் ஒருவர் மீதொருவர் பொறாமையும் பொச்சரிப்பும் பூண்டு ஒருவரையொருவர் தாக்கிப் பேசி எழுதும் இழிகுணத்தையே மேற்கொண்டுள்ளனர். எனது மதிப்பிற்குரிய தலைவர் பெரியார் ஈ. வெ. இராமசாமி அவர்கள் கூறுவார். சில சமயம் இந்தத்தமிழ்ப் பண்டிதர்கள் ஒரு பன்னிருவர்சேர்ந்து ஒரு சிறு மாநாடுநடத்தினாலும், அருகே ஒரு ஸ்பெஷல் போலீஸ் வேண்டும் அவர்களிடை நிகழும் சண்டை சச்சரவைத் தீர்ப்பதற்காக என்பது தான் அது. அது கேட்டு நாம் மனம் மிக மருளுவதுண்டு. ஆனால் சென்ற திங்கள் காஞ்சியிலே பொங்கல் விழாக்

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/14&oldid=1547506" இலிருந்து மீள்விக்கப்பட்டது