பக்கம்:நாடும் ஏடும்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தகைய முற்போக்கானமுறைகள் கையாளப்படுகின்றகாலையில் நம் நாட்டில் பழமை பழமை என்று பாடித்திரியும் பண்டிதர்கள் தம் பரிதாப நிலைகண்டு நாம் இரங்காது வேறென்ன செய்வது!

கம்பர் செய்த தொண்டு

கம்பராமாயணத்திலே கம்பன் கிட்கிந்தையை வருணிக்குங்கால் அதனையொரு சிறந்த நாடாகக்காண்கின்றான். ஆங்கு வதியும் மக்கள் சகலகலா வல்லவர்கள் என்றும், சாஸ்திர விற்பன்னர்கள் என்றும், நீதி தவறாது ஆண்டனர் என்றும், பலப்பல ஆடை ஆபரணங்கள் அணிந்திருந்தனர் என்றும் பெண்கள் மிக அழகுள்ளவர்களென்றும், பேசுவதில் ஆற்றல் மிக்கவர்கள் என்றும் கூறி முடிவில் அவர்கள் குரங்குகள் விலங்குகள் என்று கூறுகின்றான் இது முன்னுக்குப்பின் முரண்பாடல்லவா!

மக்களின் கருத்திற்கேற்ற நற்குணங்கள் யாவும் படைத்தவர்கள் என்று கூறிய அதே வாயால் அவர்களைக் குரங்குகள் என்று அடுத்தாற்போன்று கூறுவது முறையா? அறிவுடையார் ஒப்பும் உண்மையாகுமா? நேர்மையா? மற்றும் கம்பன் இலங்கையை வருணிக்கும் பொழுது மாட மாளிகைகளும் கோபுரங்களும் அமைந்த நகரம் என்று கூறுகின்றான். கற்றார் வேதமோதினர்; நகரெங்கும் ஆடல் பாடல் நிரம்பியிருந்தது; ஆங்காங்கு வீணை முதலிய இசைக் கருவிகளின் ஓசை எழுந்தது என்று சிறப்பாகக் கூறுகின்றான். ஆனால் அங்கு வதிந்தவர்கள் இரக்கமில்லாதவர்கள் என்று கூறுகின்றான். ஆண்கள் மகா கோர உருவினர்; நீண்ட வாயும். கோரைப் பற்களும், செம்பட்டை மயிரும், கரிய மேனியும், பெருஉடலும் கொண்டு விகாரமாய் விளங்கினர் என்கின்றான். ஆனால் பெண்களைப்பற்றிக் கூறும்போது மட்டும் அவரது இயற்கையான பெண்களைப் பாடுவதிலுள்ள தனி விருப்பப்படி அழகிகள், அந்தர மாதர்க்கு ஒப்பா-

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/37&oldid=1547555" இலிருந்து மீள்விக்கப்பட்டது